பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. அன்புக்கொரு ஜீவன்

LITமாவின் சிரிப்பை மட்டும் என்ன-நெடுங் கடலை, நீலவானை, உதயசூரியனை, பூரணசந்திரனை, தாரகையை, தென்றலை, வண்ண மலரை, பாடும் குயிலை, ஆடும் மயிலைக் கூட மணி வெறுக்கக்கூடிய நிலையில்தான் இருந்தான் அப்போது

ஆம், அருணாவின் மரண சாசனம் அந்த அளவுக்கு வெறுப்பு மூட்டியிருந்தது. அவனுக்கு. வெறுப்பு அவளுடைய மரண சாசனத்தின் மேல் மட்டுமல்ல; அவள் மேலும்தான்!

என்னப் பெண்கள் இந்தக் காலத்துப் பெண்கள்? எடுத்ததற்கெல்லாம் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு எது தங்களை மாய்க்க வருகிறதோ, அதையல்லவா மாய்க்க வேண்டும், இவர்கள்!

அடிக்கடி தனக்குத் தொல்லை கொடுத்து வந்த காளை ஒருவனை, கன்னி ஒருத்தி செருப்பால் அடித்தாளாமே, அந்தத் தைரியம் வேண்டுமானால் இவர்களுக்கு வரவேண் டாம்; அடிக்கடித் தன்னுடன் வம்புக்கு நின்றப் பதி ஒருவனை, பத்தினி ஒருத்திப் பல்லால் கடித்தேக் கொன்று விட்டாளாமே, அந்தத் துணிவு வேண்டுமானால் இவர்களுக்குப் பிறக்க வேண்டாம்-சட்டம் இருக்கிறதே, பதினெட்டு வயது நிரம்பிவிட்டால் எந்தப் பெண்ணும் தனக்கு விருப்பமானவனை எந்தவிதமானத் தடைக்கும் அஞ்சாமல் திருமணம் செய்துக்கொண்டு விடலாம் என்று. உரிமை இருக்கிறதே, அந்தத் திருமணத்துக்குப் பிறகும் அவன் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அவனிடமிருந்து சட்ட ரீதியாக அவள் விலகிக்கொண்டு விடலாமென்று. அவற்றையாவது பயன்படுத்திக் கொள்ளக்கூடாதா, இவர்கள்?