பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 263

அருணாவின் சடலம் கடற்கரையில் ஒதுங்கும், ஒதுங்கும் என்று அன்று முழுவதும் அங்குமிங்குமாக அலைந்துக் கொண்டிருந்த மோகன், கடைசியாக அலுத்துப் போய் அங்கிருந்த ஒருக் கட்டுமரத்தின் மேல் உட்கார்ந்தான். இப்போது அவன் கண்கள் அழுதுப் புலம்பவில்லை. மனம்தான் அழுது புலம்பிக்கொண்டிருந்தது.

ஐயோ, அருணா என்னைவிட உன்னை நான் தைரியசாலி என்று நினைத்தேனே? கடைசியில், எனக்குள்ள தைரியம்கூட உனக்கு இல்லாமற் போய்விட்டதே?

அப்படி என்ன நடந்துவிட்டது, இவ்வளவு அவசரப் பட்டு நீ இந்த முடிவுக்கு வந்துவிட?-அப்பா சொன்ன ஒரு வார்த்தை, அப்பா அடித்த ஒர் அடி-அதற்கா இவ்வளவு பெரிய தண்டனை எங்களுக்கு?

ஒரே ஒரு முடி உதிர்ந்தால்கூட கவரிமான் உயிர் வாழாது என்கிறார்களே, அந்த இனத்தைச் சேர்ந்தவளாவல்லவா ஆகிவிட்டாய், நீ?-அந்த அளவுக்கு அப்பா என்ன செய்தார், உன்னை? யாரோ ஒரு கயவனுடன் அவர் உன்னை விளையாடவிட்டு வேடிக்கை பார்த்தவர் என்று எழுதியிருக்கிறாயே, அந்த விளையாட்டா உன்னை இந்த வினைக்கு உள்ளாக்கிவிட்டது? *

தாங்க முடியாத துக்கம் அருணா, இது தாங்க முடியாத துக்கம்!-மானம் பெரிதென்று நினைக்கும் நீ, வாழ்வு பெரி தென்று நினைக்கும் அப்பாவுக்கா பெண்ணாய் வந்து பிறக்க வேண்டும்? அதற்காக வாழ்வைக் காதலிக்க வேண்டிய இந்த வயதிவே, நீ சாவையாக் காதலிக்க வேண்டும்?

அப்பாவுக்காகச் சாகத் துணிந்த நீ, அம்மாவுக்காக வாழத் துணிந்திருக்கக் கூடாதா? அவர்கள் என்ன செய்தார்கள் உன்னை சேதி கேட்டு அலறி விழுந்தவர்கள் இன்னும் எழுந்திருக்கவேயில்லையே, அருணா

அவர்களுக்கு அடுத்தபடியாக அந்த வீட்டில் என் அன்புக்கு ஆதாரமாயிருந்த ஒரே ஜீவன் நீ!-உன்னுடைய