பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 காதலும் கல்யாணமும்

‘கிடைக்கவில்லை; வாருங்கள் போவோம். உங்களை நான் உங்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போகிறேன்!” என்றார் அவர், மறுபடியும்.

‘நன்றி, இதுவரை செய்த உதவிக்கு. இனி நீங்கள் போகலாம்!” என்றாள் அவள்.

அவர் போகவில்லை; ‘'இந்த நிலையில் உங்களை விட்டு விட்டா? அதுதான் முடியாது’ என்றார், நின்ற இடத்திலேயே நின்று.

‘முடியாதென்றால் நீங்கள் போய்க் காரில் உட்காருங் கள்; நான் போய் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு வந்து விடுகிறேன்’ என்றாள் அவள், அவரிடமிருந்து தப்ப.

‘காரை யார் எடுத்துக்கொண்டுப் போய்விடப் போகிறார் கள்? நானும் உங்களுடன் வருகிறேன்’ என்றார் அவர், அவளைப் புரிந்துகொண்டு.

“என்னை மட்டும் யார் எடுத்துக்கொண்டுப் போய்விடு வார்களாம்?’ என்றாள் அவளும், அவரைப் புரிந்துகொண்டு. ‘அலைகள் ஏனெனில், அவை ஏற்கெனவே ஒரு முறை உங்களை எச்சரித்திருக்கின்றன!’ என்றார் அவர்.

‘'நாசமாய்ப் போகட்டும் அவற்றை யார் எச்சரிக்கச் சொன்னார்கள், என்னை?’ என்றாள் அவள்.

‘கடவுள்! ஏனெனில், அவர் நீங்கள் சாவதை விரும்பவில்லை’

‘அதனால்தான் அவரோடு சேர்ந்து நீங்களும் என்னைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள் போலிருக்கிறது சரி, காப்பாற்றுங்கள்; எத்தனை நாட்கள் உங்களால் என்னைக் காப்பாற்ற முடியுமோ, அத்தனை நாட்கள் காப்பாற்றுங்கள்!” என்று சொல்லிக்கொண்டே அவள் திரும்பினாள்.

பரந்தாமன் அவளைத் தொடர்ந்தார். வெற்றிப் புன்னகையுடன் அல்ல; நீண்டப் பெருமூச்சுடன்!

இருவரும் காரில் ஏறி உட்கார்ந்ததும், “எங்கே இருக் கிறது உங்கள் வீடு?” என்றுக் கேட்டார் பரந்தாமன் மெல்ல.