பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 269

“என் வீடு எங்கே இருந்தால் உங்களுக்கென்ன? அங்கே நான் போக விரும்பவில்லை’ என்றாள் அருணா, இரைந்து.

‘வேறு எங்கே போக விரும்புகிறீர்கள்?” ‘'நான் போக விரும்பிய இடத்துக்குத்தான் நீங்கள் என்னைப் போகவிடவில்லையே?”

‘இப்படியே நீங்கள் பேசிக்கொண்டிருந்தால் கடைசி யில் நான் உங்களை என்ன செய்வேன், தெரியுமா?”

‘என்ன செய்வீர்கள்?” ‘போலீசாரிடம் கொண்டு போய் விட்டுவிடுவேன்!” ‘போலீசாரிடம் என்ன, தூக்குமேடைக்கே வேண்டு மானாலும் கொண்டுபோய் விட்டுவிடுங்கள்!”

இது என்னத் தொல்லை1-ஆம், சற்று நேரத்துக்கு முன்னால் அருணாவுக்குப் பரந்தாமன் தொல்லையாகத் தோன்றியது போலவே பரந்தாமனுக்கு அருணா தொல்லை யாகத் தோன்றினாள் இப்போது-ஆனாலும், அதற்காக அவளைக் கீழே இறக்கிவிட்டுவிடவும் அவர் விரும்ப வில்லை; அப்படி இறக்கி விடுவதாயிருந்தால்தான் மருந்துவமனையின் வாசலிலேயே அவர் அவளை இறக்கி விட்டுவிட்டிருக்கலாமே?

ஆகவே தன் மனத்தைத் தானே திடப்படுத்திக் கொண்டு, ‘என் வீட்டுக்கு வேண்டுமானால் வருகிறீர்களா?” என்றார் அவர்.

‘உங்கள் வீட்டுக்கா, நான் எதற்கு? என்றாள் அவள். ‘முதலில் உங்கள் உடையை மாற்றிக்கொள்ளலாம், பிறகு...’

‘பிறகு என்ன?” ‘உங்களை நீங்களே கொஞ்சம் சரி செய்துக் கொள்ள லாம்!”

‘ஏன், இப்போது நான் சரியாக இல்லையா?” ‘'சரியாய்த்தான் இருக்கிறீர்கள்; மூளைதான் கொஞ்சம்..."