பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. சங்கமம்

விடியுமா.அன்றைய இரவு மட்டுமல்ல, அருணாவின் வாழ்வும் விடியுமா என்ற கவலையோடு, அவளுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் பரந்தாமன்.

அவருக்குக் கீழே மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்று எரிந்துக் கொண்டிருந்தது. அதன் உதவியால் அவ்வப்போது கோதுமைத் தவிட்டை வறுப்பதும், வறுத்த தவிட்டை எடுத்து ஒத்தடம் கொடுப்பதுமாக அவருடைய நேரம் கழிந்து கொண்டிருந்தது.

என்ன ஒத்தடம் கொடுத்து என்னப் பயன் அவளிடம் எந்தவிதமான மாறுதலும் இல்லை; நிலை குத்தி நின்ற கண்கள் நிலை குத்தி நின்றபடியேதான் இருந்தன. அதுதான் பெரிய சோதனையாயிருந்தது அவருக்கு. எப்படியாவது இவள் பிழைத்துவிட்டால் எல்லாருக்கும் நல்லது; பிழைக்காவிட்டால்?...

அந்தப் பழி தன்மேல் விழுந்தாலும் விழுந்துவிடலாம் அல்லவா?

அதற்காகத் தான் என்ன செய்ய முடியும், இப்போது? இவளுடைய விருப்பத்துக்கு விரோதமாக இவளைக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துவிட முடியுமா? இல்லை, போலீசாரிடம்தான் ஒப்படைத்துவிட முடியுமா?

அப்படியே ஒப்படைத்தால்தான் என்ன? எந்த வம்புக்கு அஞ்சுகிறேனோ, அந்த வம்பு தன்னை விட்டுவிடவா போகிறது -ஊஹாம்!

ஒன்று வேண்டுமானால் செய்யலாம்-எந்தக் கடற்கரையில் இவள் ஒதுக்கப்பட்டுக் கிடந்தாளோ, அதே கடற்கரையில் இவளைக் கொண்டு போய்க் கிடத்திவிட்டு வேண்டுமானால் வந்துவிடலாம். ஒரு பொறுப்புள்ள மனிதன் செய்யக்கூடிய காரியமா, அது-ைசீச்சீ