பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 காதலும்கல்யாணமும்

‘பார்த்தீர்களா, மறுபடியும் நீங்கள் என்று ஆரம்பித்து விட்டீர்களே?”

‘இல்லையில்லை; நீ வேண்டுமானால் கொஞ்சம் ஆர்லிக்ஸ் சாப்பிடுகிறாயா?”

‘கொடுங்கள்; உங்கள் கையால் விஷத்தைக் கொடுத் தாலும் அதை நான் இப்போது மகிழ்ச்சியுடன் சாப்பிடத் தயார்’ என்றாள் அவள்.

அவர் எழுந்தார்; ‘'அதிசயமான மனிதர்; மணி அண்ணனைப்போல் இவரும் ஒர் அதிசயமான மனிதர்’ என்றாள் அவள்.

‘என்ன, மணி அண்ணனா!’ என்றார் அவர், வியப்புடன் திரும்பி.

‘ஆம்; ஒன்றுக்கு இரண்டு அண்ணன்மார் எனக்கு இருக்கிறார்கள். ஒருவர் பெயர் மோகன்; இன்னொருவர் பெயர் மணி!” என்றாள் அவள்.

‘அடக், கடவுளே! எனக்கு நீ ரொம்பத் தூரத்தி லிருப்பதாகவல்லவா நான் நினைத்தேன்? இவ்வளவு அருகில் இருக்கிறாயே?’ என்றார் அவர்.

‘ஏன், அவர்களைத் தெரியுமா உங்களுக்கு?” ‘தெரியும்; என்னுடன்தானே அவர்களும் வேலை பார்க்கிறார்கள்’ என்றார் அவர்.

‘அடப், பாவமே இப்படியா அகப்பட்டுக்கொள்வேன் நான் உங்களிடம்?’ என்றாள் அவள்.

LDறுநாள் காலை சொன்னது சொன்னபடி டாக்டர் வந்தார்; அருணாவைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ‘இனி பயமில்லை, எல்லா அபாயத்தையும் தாண்டிவிட்டாள்!” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அவருடையத் தலை மறைந்ததும், ‘அவருக்குத் தெரியாது, இனிமேல்தான் அபாயமெல்லாம் இருக்கிற தென்று!” என்றார் பரந்தாமன், சிரித்துக்கொண்டே.