பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 காதலும்கல்யாணமும்

அழைத்துக் கொண்டுப் போக வேண்டுமே என்பதற்காக மறுநாள் வருவதாகச் சொல்லி விட்டான்.

‘அதற்கு மேல் என்ன செய்வது? என்ற யோசனையுடன் அன்று மாலை அவர் கடற்கரைக்குச் சென்ற போது...

ஆழம் காண முடியாத கடலுக்கு அருகே, ஆழம் காண முடியாத சோகத்துடன் உட்கார்ந்துக் கொண்டிருந்த மோகன் அவரைக் கண்டதும் தன்னையறியாமல் எழுந்து நின்றான். அவனைத் தொடர்ந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாமாவும் எழுந்து நின்றாள்.

‘இன்னும் நீ வீட்டுக்குப் போகவில்லையா?’ என்றார் அவர், அவளை நோக்கி.

‘இல்லை. இவர் இங்கே... இவர் இங்கே...” ‘அது எனக்குத் தெரியும்; அதற்காக நீ இவருடன் இருந்து என்ன செய்யப் போகிறாய், இங்கே? கல்யாண மாகியிருந்தாலும் யாரையாவதுக் கட்டிக்கொண்டு அழலாம்; அதுவுந்தான் ஆகவில்லையே, இன்னும்?’ என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

அவருடைய சிரிப்பு என்னவோ போலிருந்தது மோகனுக்கு. எல்லாம் தெரிந்த இவரா இப்படிச் சிரிக்கிறார்!’ என்று தனக்குள் நினைத்தான்.

அதற்குள், ‘இவருடைய நிலைமை தெரிந்துமா நீங்கள் இப்படிச் சிரிக்கிறீர்கள் என்னால் நம்பவே முடிய வில்லையே?’ என்றாள் பாமா, வியப்புடன்.

“எப்படி நம்ப முடியும், என்னுடைய நிலைமை உங்களுக்குத் தெரிந்தால்தானே? வாருங்கள், போவோம்!” என்றார் அவர்.

“எங்கே?’ என்று கேட்டாள் அவள். “என் வீட்டுக்கு!” ‘உங்கள் வீட்டுக்கா, எதற்கு?"