பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 காதலும் கல்யாணமும்

‘இன்னொரு விஷயத்தை நான் இதுவரை உன்னிடம் சொல்லவில்லை; அதைச் சொன்னால் நீ இப்படிப் பயப்பட மாட்டாய்!’

“அது என்ன விஷயம்?”

‘உன்னுடைய கடிதத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தெரியுமா? அவரை ஏமாற்றுவதற்காக நீ அப்படி ஒரு கடிதம் எழுதிக் கடற்கரையில் வைத்துவிட்டு, யாரோ ஒருவனுடன் ஒடிப் போய் விட்டாய் என்று நினைக்கிறார் போதுமா? நீ தைரியமாயிருக்க இன்னும் ஏதாவது வேண்டுமா?” என்றான் அவன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு.

அவ்வளவுதான்; ‘வேண்டாம், அண்ணா! போதும், அதுவே போதும்’ என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் அவள்.

41. சுந்தரின் கடிதம்

&

அருணா இறந்திருப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை; தனக்குப் பழக்கமான யாரோ ஒருவனுடன்

அவள் ஒடித்தான் போயிருக்க வேண்டும்’

ஆபத்சகாயம் இப்படிச் சொல்லித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள நினைத்தாலும், அதற்குக் காரணம் அவர்தான் என்பதை அவருடைய மனம் மட்டும் அடிக்கடி அவருக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தது. அதன் காரணமாக அவள்மேல் அவர் கொண்ட ஆத்திரம் வெகு சீக்கிரத்திலேயே அனுதாபமாக மாறிற்று. அந்த அனுதாபத் துடன் அவள் தனக்கு அனுப்பி வைத்த நகைகளையும், எழுதி வைத்தக் கடிதத்தையும் எழுபத்தோராவது தடவை யாக அவர் ஏறெடுத்துப் பார்த்தபோது, அவரையும் அறியாமல் அவருடையக் கண்கள் குளமாயின. அத்துடன்,