பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 காதலும்கல்யாணமும்

அடுத்த நிமிடம் மோகன் வந்து அவருக்கு முன்னால் நின்றான். ‘உங்களிடம் நான் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டியிருக்கிறது; இன்று மாலை கடற்கரையிலுள்ள காந்தி சிலைக்குக் கீழே என்னை வந்துப் பார்க்க முடியுமா உங்களால்?” என்றார் பரந்தாமன்.

‘அதற்கென்ன, அவசியம் வந்துப் பார்க்கிறேன்!” என்றான் அவன், அதுவும் அருணாவின் கல்யாணத்தைப் பற்றியப் பேச்சாய்த்தான் இருக்குமென்று எண்ணி!

ஆனால் அன்று மாலை அவன் அவரை அவர் சொன்ன இடத்தில் சந்தித்தபோது...

அவர் அவனிடம் ஒன்றும் பேசவில்லை; அதற்குப் பதிலாகத் தன் பெயருக்கு வந்திருந்தப் பிரித்த கவர் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டிவிட்டுத் தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார்.

அவன் அதற்குள் இருந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்தபோது...

அவன் தலையில் இடி விழவில்லை; இந்த உலகமேக் கீழே இறங்கி, அவனைக் கீழே கீழே இழுத்துக் கொண்டே செல்வது போலிருந்தது.

காரணம் வேறொன்றுமில்லை; அவன் கையிலிருந்தக் கடிதம் சுந்தரின் கடிதமாயிருந்ததுதான்!

‘எனது முன்னாள் காதலியான அருணாவுக்கும், இந்நாள் காதலரான திரு. பரந்தாமனார்க்கும்,

என் இதயபூர்வமான அனுதாபங்கள்! கடலால்கூடக் கைவிடப்பட்டுவிட்ட அருணாவுக்கும் உங்களுக்கும் கல்யாணம் என்று அறிய மகிழ்ச்சி. அந்தக் கல்யாணத்துக்கு இத்துடன் இருக்கும் கடிதங்கள் எந்த வகையிலாவது உதவுமா என்றுப் பாருங்கள்.

இங்ஙனம், சுந்தர்.'