பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 காதலும்கல்யாணமும்

ஆபத்சகாயத்திற்கு ஒன்றுமேப் புரியவில்லை; ‘இதெல்லாம் என்ன?” என்றார் வியப்புடன்.

‘தெரியவில்லையா, இருமனம் ஒருமனப்பட்டத் திருமணங்கள் என்று!” என்றான் மணி.

“எல்லாம் உன் வேலைதானா?” என்றார் அவர். ‘இல்லை; அம்மாவின் துணையுடன் அவரவர்களே செய்துக் கொண்ட வேலைதான்!” என்றான் மணி.

‘அப்படியா சங்கதி, எங்கே அந்தத் திருடி?” என்றார் அவர்.

‘இதோ இருக்கிறேன்! நான் செய்தது குற்றமானால் என்னை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; குழந்தைகளை மட்டும் ஒன்றும் செய்யாதீர்கள்!’ என்றாள் அவள், அவருக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்று,

‘போடிப் பைத்தியமே இருவரும் சேர்ந்தாற்போல் குழந்தைகளை வாழ்த்த வேண்டும் என்பதற்காகவல்லவா உன்னை நான் கூப்பிட்டேன்?’ என்றார் அவர்.

அதற்குமேல் அங்கே நிற்க விரும்பாமல், ‘சரி, நான் வருகிறேன்’ என்று மணி கிளம்பினான்.

‘ஆமாம்; உன்னுடைய மனத்தோடு இதுவரை எந்த மனமும் ஒன்றுபடவில்லையா?’ என்றார் அவர், சிரித்துக்கொண்டே.

‘இல்லை. ஏனெனில் வாழ்க்கையில் நான் காதலை ஒரு பிரச்னையாக நினைக்கவில்லை; கல்யாணத்தை ஓர் லட்சியமாகவும் கருதவில்லை’ என்றான் அவன்.