பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காதலும் கல்யாணமும்

‘ஐயோ பாவம், அந்த நிலையில் அவளுக்குப் படிக்கக்கூட நேரம் இருந்திருக்காது போலிருக்கிறதே?”

‘இல்லை; ஐந்தாம் வகுப்புடன் தன்னுடைய படிப்பை நிறுத்திக் கொண்டு, எங்களுடைய படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாள் அவள்’ ‘அப்பாவின் சொத்து ஏதாவது...’ ‘இருந்தது, அவருடைய தலை முடி! -திருப்பதி வேங்கடாசலபதிக்குக் காணிக்கை செலுத்துவதற்காக எடுத்து வைத்தது’

‘அப்படியானால் அவள் தியாக சிகரமாய்த்தான் இருக்க வேண்டும்!” என்றான் அவன்.

‘இல்லாவிட்டால் அவள் சொன்னபடியெல்லாம் நான் ஏன் ஆடுகிறேன்? அவளுக்காக இந்த வேஷத்தையெல்லாம் நான் ஏன் போடுகிறேன்? என்றாள் அவள், கண்ணில் நீருடன்.

அவன் அதைத் துடைத்து, ‘அந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் உன் அக்காவின் கட்சி!’ என்றான் குறுநகையுடன்.

‘எந்த விஷயத்தில்?’ என்று தன்னை மறந்து கேட்டாள், அவள்.

‘உன்னுடைய ஆடை அலங்கார விஷயத்தில்!” என்றான் அவன், அவளுடைய கண்ணாடிச் சேலையைக் கண்ணால் மட்டும் பார்த்து ரசித்தால் போதாதென்று, கையாலும் தொட்டுப் பார்த்து ரசித்துக் கொண்டே.

அவள் அவனுடைய கையை எடுத்து அப்பால் வைத்து விட்டு, ‘எனக்குத் தெரிந்தவரை இது மனிதனை உயர்த்தவில்லை; தாழ்த்துகிறது!” என்றாள் வெறுப்புடன்.

அந்தச் சமயத்தில், சாராய வாடை குப்பென்று வீச யாரோ ஒரு முரடன் தட்டுத் தடுமாறிக்கொண்டே அங்கு வந்து, ‘நானும் ரொம்ப நேரமா பாத்துக்கிட்டுத்தான்