பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காதலும்கல்யாணமும்

அவளுடைய முகத்தில் எப்படி விழிப்பேன்?-இல்லை, உன்னுடைய முகத்தில்தான் எப்படி விழிப்பேன்? என்று அவனைக் கேட்பது போலிருந்தது.

‘உண்மைதானடா அது நடந்தபிறகு எனக்கும் அப்படித்தான் தோன்றிற்று; ஆனால், கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது என்னால் தவிர்க்க முடியாததென்று தோன்றவில்லையா, உனக்கு?-தோன்றித்தான் இருக்கும்; ஆனால் உணர்ச்சி அந்தப் பெண்ணைப் பார்க்க மட்டும் என்ன, என்னைப் பார்க்கக் கூட உன்னை ஓரிரண்டு நாட்களாவது யோசிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கும்அதனாலென்ன, நான் கொஞ்சம் தாராளமாகவே லீவு போட்டு விடுகிறேனே. நாலைந்து நாட்களுக்கு அதற்குள் நீ எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு விடமாட்டாயா?என்ன, நான் சொல்வது?’ என்று அந்தப் படத்தைப் பார்த்து அவன் சமாதானம் சொல்லிக் கொண்டே படுக்கையை எடுத்து விரித்துவிட்டு, விளக்கை அனைத்தான் படுக்க!

பாவம், பிறருடைய உணர்ச்சியை மதிக்கத் தெரிந்த அவனுக்குத் தன்னுடைய உணர்ச்சியையே மதிக்கத் தெரியாத மோகனா நண்பனாக வந்து வாய்க்க வேண்டும்?

6. கல்கத்தா ரசகுல்லா

கிடைசி நாள் பரீட்சையை எழுதி முடித்ததும், “போர், போர்’ என்று கத்திக்கொண்டே கலாசாலையை விட்டு வெளியே வந்தாள் அருணா.

“எதைச் சொல்கிறாய் பரீட்சையைச் சொல்கிறாயா, பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விகளைச் சொல்கிறாயா?” என்று கேட்டாள், அவளைத் தொடர்ந்து வந்த அவள் தோழிகளில் ஒருத்தியான எழிலி.