பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 காதலும்கல்யாணமும்

வந்து பார் என்கிறாள் அவள், நான் எங்கே போவது? எனக்கோ இங்கேயே படுத்துக்கொண்டுவிட்டால் தேவல்ை என்று தோன்றுகிறது!’ என்றாள் அவள், அப்படியே துவண்டு தொப்பென்று கீழே விழுந்துவிடுபவளைப் போல. “சீச்சீ, அப்படியெல்லாம் செய்து விடாதேயடி போ, போ! அவள் உனக்காக அங்கே காத்துக் கொண்டிருக்கப் போகிறாள்? போடி,போ!’ என்றாள் பொற்கொடி.

‘சரி, நான் வருகிறேன்!” என்று அருணா புறப்பட்டாள். அவள் தலை மறைந்ததுதான் தாமதம், அதுவரை அடக்கி வைத்திருந்த சிரிப்பை அடக்க முடியாமல், அவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்!

அருணாவைப் பற்றிய அந்த வம்பில்தான் அவர்களுக்கு என்ன ஈடுபாடு, என்ன ஈடுபாடு!

உமா சொன்னது உண்மைதான்; பரீட்சை எப்போது முடியும், எப்போது முடியும் என்று காத்துக்கொண்டிருந்த சுந்தர்தான் அன்று மாலை மியூஸியத்துக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அருணாவைப் போனில் அழைத்திருந்தான். அவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கே சென்ற அருணாவைக் கண்டதும், “உனக்கு நான் தொந்தரவு கொடுத்துவிட்டேனோ?” என்றான் சுந்தர், படுபவ்வியமாக. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கும் கொஞ்ச நேரம் உங்களுடன் இருந்து பொழுது போக்கினால் தேவலை என்று தோன்றிற்று; அந்தச் சமயம் பார்த்துத்தான் நீங்களும் ‘போன் செய்திருந்தீர்கள்’ என்ற அருணா, ‘ஆமாம், போயும் போயும் என்னை மியூஸிய'த்தில் வைத்துத்தானா பார்க்கத் தோன்றிற்று, உங்களுக்கு?’ என்று கேட்டாள் சிரித்துக் கொண்டே.

‘வேறு எப்படித் தோன்றும் எனக்கு? அத்தகைய அபூர்வ பொருளாய்த்தானே இருக்கிறாய், நீ?-அடேயப்பா, உன்னைப் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டன? அங்கே