பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 49

‘எதைப் பற்றிக் கேட்கிறாய், அக்கா?’ என்று அவளையே மெல்ல விசாரித்தாள்.

‘போடி, போ! உனக்கென்று ஒருவனை நீ தேடிப் பிடித்திருக்கிறாயாமே, அதை நீ ஏன் என்னிடம் சொல்ல வில்லை?” என்றாள் அவள்.

அவ்வளவுதான்; விஷயம் புரிந்துவிட்டது பாமாவுக்கு. ‘இனி மறைப்பதில் பயனில்லை என்று நினைத்த அவள், “அதை நான் உன்னிடம் சொல்லலாமா, அக்கா?’ என்றாள் ராதாவின் தோள்கள் இரண்டையும் தன் கைகளால் பற்றித் தொங்கிக் கொண்டே.

‘என்னைத் தவிர உனக்கு வேறு யார் இருக்கிறார்கள் சொல்ல? நான்தானே உனக்கு அப்பா, அம்மா எல்லாம்?” என்றாள் ராதா.

இதைச் சொல்லும்போது, குளமான தன் கண்களை மறைப்பதற்காக அவள் கீழே குனிந்தாள். அப்போது அவளுடைய கண்களிலிருந்து உருண்டு திரண்டு வந்த இரண்டு கண்ணிர்த் துளிகள் பாமாவின் கைகளின்மேல் பட்டுச் சிதறின!

‘ஐயோ, அக்கா! அதற்காக நீ அழுகிறாயா, என்ன?-அழாதே அக்கா சொன்னால் மரியாதைக் குறைவாக இருக்குமே என்றுதான் சொல்லவில்லை. என்ன இருந்தாலும் உன்னைவிடச் சிறியவள் இல்லையா, நான்?” என்றாள் பாமா, பதறிப்போய்.

‘போடி பைத்தியமே சிறியவளாவது, பெரியவளாவது? ‘என் மனம் போல் நீ; உன் மனம் போல் நான் என்று இருந்தால் போதாதா, நாம்? நமக்குள்ளே மரியாதை என்னத்துக்கு, மண்ணாங்கட்டி என்னத்துக்கு?” என்றாள் ராதா. எல்லாவற்றையும் கடந்துவிட்ட அவள் அன்பு பாமாவை என்ன செய்ததோ என்னமோ, ராதாவை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொண்டு, ‘என்னுடைய தவறு இப்போதுதான் எனக்குத் தெரிகிறது, அக்கா! நீ எனக்கு