பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 51

‘அவர்கள் என்ன சொல்கிறார்கள், தெரியுமா? - நீ அவளை அப்படியே விட்டுவிடாதே அவள் பயந்து பயந்து அவனுடன் பழகுவது அவளுக்கும் நல்லதல்ல, அவனுக்கும் நல்லதல்ல; இருவரும் உனக்குத் தெரிந்தே பழகட்டும்அதுதான் உனக்கும் நல்லது; அவர்களுக்கும் நல்லது என்று சொல்கிறார்கள்’

‘போ அக்கா, நீ புளுகுகிறாய்!” ‘'வேண்டுமானால் நீயே கேட்டுப் பாரேன்?” ‘ஊஹாம்; நான் கேட்க மாட்டேன்’ ‘கேட்காவிட்டால் அவர்கள் உன்னை விட்டுவிடப் போகிறார்களா, என்ன? அவர்களே ஒரு நாள் ‘எங்கே அவன்? என்று உன்னைக் கேட்டுவிடுவார்கள்!’

‘அவ்வளவுதான்; ஒடியே போய்விடுவேனாக்கும், நான்’

‘அப்படி ஒடிக் கீடி வைக்கப் போகிறாய் என்றுதான் அவர்கள் எனக்குத் தெரிந்து உங்களைப் பழகச் சொல்கிறார்கள்’

‘அவர்கள் சொல்வது சரி; ஆனால் உலகம் ஒப்புக்கொள்ள வேண்டுமே, அதை’

‘நமக்கு அவர்கள்தானேடி, உலகம்?-உண்ணும் சோறு அவர்களுடையது; உடுத்தும் உடை அவர்களுடையது; உறங்கும் இடம் அவர்களுடையது-இரண்டு வேளை சமைத்துப் போடுவதற்காக இத்தனையையும் உதவி வரும் அந்த உலகத்தை விட்டால் நமக்கு வேறு உலகம் ஏது?” இந்தச் சமயத்தில் ‘ராதா, ராதா என்று ‘அந்த உலகமே அங்கு வந்து குரல் கொடுக்கவே, “இதோ வந்து விட்டேன், அம்மா!’ என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே எழுந்து வெளியே வந்தாள் ராதா.

‘பாமா வந்துவிட்டாளா?”

‘வந்துவிட்டாள்'