பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஒரு விண்ணப்பம்

மோகனுக்காகத் தான் எடுத்துக்கொண்ட லீவைப் பெரும்பாலும் ஒட்டல் அறையிலேயே கழித்துவிட்ட மணி, வேலைக்குப் போவதற்கு முன்னால் அவனை ஒரு நாள் வீட்டில் பார்த்துத் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். அதற்காக அவன் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்தபோது மோகனே வந்து எதிர்த்தாற்போல் நின்றால், அவனுக்கு எப்படி இருக்கும்?-"ஏண்டா மோகன், நிஜமாக நீதானா?” என்றான், அவனை மேலுங் கீழுமாகப் பார்த்துக் கொண்டே.

‘'நானேதான்! அதில் என்ன ஆச்சரியம் உனக்கு?” என்றான் அவன், குனிந்த தலை குனிந்தபடி.

‘கீழே பார்க்காதே. மேலே பார்!” என்று அவன் தலையைத் தூக்கி நிறுத்திவிட்டு, ‘இப்போது நான் எங்கே புறப்பட்டுக் கொண்டிருந்தேன் தெரியுமா? உன்னைப் பார்க்கத்தான்! அதற்குள் நீயே வந்து இங்கே நின்றால் எனக்கு ஆச்சரியமாயிருக்காதா?”

‘அதைவிட ஆச்சரியமாயிருக்கிறது, அன்று நான் உன்னிடம் அவ்வளவு மோசமாக நடந்துகொண்டும் ஏதுமே நடக்காதது போல் நீ என்னிடம் பேசுவதும், பழகுவதும்!”

‘அப்படி என்ன நடந்துவிட்டது, நமக்குள்ளே? ஒன்றுமில்லையே, உட்கார். காபி கொண்டு வரச் சொல்கிறேன்!” என்று.அவனை உட்கார வைத்துவிட்டு, ‘சங்கர், சங்கர்’ என்று குரல் கொடுத்தான் மணி.

அதுவரை படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே மூடி எடுத்துக்கொண்டு வந்த சங்கர், “என்ன சார் என்ன வேண்டும், உங்களுக்கு?” என்று கேட்டான்.

‘இரண்டு கப் காபி'