பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 61

முன்னேறி விட்டதே?-அவன் என்ன செய்வான், பாவம்! அவனுக்கும் அவனுடைய மனைவிக்குமே அந்தக் கதியென்றால்,அவனைச் சேர்ந்தவர்களின் கதியைப் பற்றியும், அவனுடைய மனைவியைச் சேர்ந்தவர்களின் கதியைப் பற்றியும் அவனால் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா?

இந்த அவல நிலையைப் புரிந்துகொள்ளும் சக்தி ராதாவுக்கு இருந்தது. எனவே, தன் பார்வைக்கு உள்ளானவன் தனக்காகத் தன் தங்கையையும் தம்பியையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கியபோது, அவள் ஆத்திரம் கொள்ளவில்லை; அனுதாபமே கொண்டாள்

வேதனை நிறைந்த இந்த வாழ்க்கையை அவள் தியாக வாழ்க்கை’ என்று நினைக்காவிட்டாலும், உலகம் நினைத்தது. நினைப்பதோடு நின்றுவிடுபவர்கள் எது வேண்டுமானாலும் நினைக்கலாம்தானே?-நினைத்தார்கள், எதுவாயிருந்தாலும் அது தங்கள் கையைக் கடிக்காமல், மனத்தைக் கடிப்பதோடு நின்றால் சரி என்ற மனப்பான்மையிலே.

ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அவள் யாருக்கு வேலைக்காரியாயிருந்தாலும், தன்னை அவ்வப்போது சற்றே அசைத்துப் பார்த்த இயற்கைக்கு மட்டும் வேலைக்காரியா யிருக்கவில்லை எஜமானியாகவே இருந்து வந்தாள். இதனால் அவளுடைய உணர்ச்சி எந்த நிலையிலும் எல்லையை கடக்கவில்லை!

ஆயினும், அவளுடைய வாழ்க்கை அமைதி நிறைந்த வாழ்க்கை என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவளை ஏமாற்றியவர்கள் மட்டுமல்ல; அவளால் ஏமாற்றப் பட்டவர்களும் அவளைச் சுற்றி இருந்தார்கள்!

இதனால் அன்றாட உணவோடு மட்டுமல்ல; உடையோடு மட்டுமல்ல; உறைவிடத்தோடு மட்டுமல்ல; உணர்ச்சிகளோடும் அவள் போராடினாள்-அந்தப் போராட்டங்களிலே அவள் அடைந்த வெற்றிகளை விடத்