பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காதலும்கல்யாணமும்

தோல்விகள்தான் அதிகம் என்றாலும், வாழ்வின் சுவையே அவற்றில்தான் இருப்பதாகத் தோன்றிற்று, அவளுக்கு:

ஆம், வெற்றியில் மட்டுமல்ல; தோல்வியிலும் சுவை கண்டு வந்தவள், அவள். ஆகவே, தன் தங்கை தனக்கென்று ஒருவனைத் தேடிக் கொண்டாள் என்று அறிந்தபோது, அவள் அதிர்ச்சியடையவில்லை; மகிழ்ச்சியே அடைந்தாள். அந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து, தன் தூக்கத்தை மறந்து, தன்னுடைய தங்கையின் எதிர்காலக் கணவனைப் பற்றி என்னவெல்லாமோ கேட்டுக்கொண்டிருந்தாள், அவள். விடிய, விடிய அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்த பாமாவுக்கு தன்னை விட்டால் தேவலை என்று தோன்றிவிட்டது. ‘இனிமேல் அவரைப் பற்றி என்னை ஒன்றும் கேட்காதே, அக்கா இன்று மாலையே வேண்டுமானாலும் அவரை நான் இங்கே வரச் சொல்லி விடுகிறேன்; நீயே அவரை என்ன கேட்கவேண்டுமோ, கேட்டுக்கொள்’ என்றாள் அலுப்புடன்.

‘சரி, நீ போய்க் குளி; நான் காபி போட்டுக் கொடுத்து விட்டு வருகிறேன்!’ என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு, அடுக்களைக்குச் சென்றாள் ராதா.

அங்கேயும் அவனை மறக்க முடியவில்லை, அவளால். அவன் எப்படி இருப்பான்?-கறுப்பாயிருப்பானா. சிவப்பா யிருப்பானா? உயரமாயிருப்பானா, குள்ளமாயிருப்பானா

சிரித்தால் அவன் முகம் எப்படி இருக்கும்?அழகாயிருக்குமா, அவலட்சணமாயிருக்குமா?

பேசினால் அவன் குரல் எப்படி இருக்கும்?கனிவாயிருக்குமா, கரகரப்பாயிருக்குமா?

அவன் எப்படியிருந்தால் என்ன, எப்படிப்பட்ட வனாயிருப்பான் என்பதல்லவா முக்கியம்?-காதல் அவனுக்குப் பொழுது போக்காயிருக்குமா அல்லது, கல்யாணத்துக்கு முன்னால் ஒருவரையொருவர் அறிந்து