பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காதலும்கல்யாணமும்

அவை முழுக்க முழுக்க விரோதமாயிருக்கின்றன. இதன் காரணமாக, உலகத்தில் எத்தனை விதமான அயோக்கியத் தனங்கள் உண்டோ, அத்தனை விதமான அயோக்கியத் தனங்களும் இங்கே அந்தரங்கமாகவே நடைபெற வேண்டியிருக்கிறது. இதுவே நமது பெருமைக்குரிய பாரம்பரியம்; இதுவே நமது மதிப்புக்குரிய பண்பாடு!வேடிக்கையாயில்லையா?

கல்யாணமாகும்வரை இந்த வேடிக்கைக்குரிய காதலி'யாகத்தான் இருக்க விரும்பினாள், பாமா. அதற்கு ஆபீசிலுள்ள அதிகாரிதான் இடம் கொடுக்கவில்லை யென்றால், வீட்டிலுள்ள அக்காவுமா இடம் கொடுக்கக் கூடாது?

அவள் என்ன செய்வாள் பாவம், எல்லாம் அந்த மீனாட்சியம்மாளால் வந்த வினை காதலுக்காக அப்பா அம்மா, அண்ணன் தம்பி, அக்கா தங்கை ஆகியவர்களை யெல்லாம் துறந்துவிட்டு ஐயாவோடு வந்தவரல்லவா அவர்? அவருக்காக அவருடைய தந்தையார் தற்கொலை செய்துகொண்டபோது கூட ‘ம்டிந்தது என் தந்தையல்ல; ம டமை ‘ என்று கொஞ்சங் கூடக் கூசாமல் சொன்னவரல்லவா, அவர்?-அவரைப் போலவே நானும் எங்கே அக்காவைத் துறந்து, தம்பியைப் பலி கொண்டு விடுவேனோ என்று அஞ்சி, ரகசியம் ஒன்றும் வேண்டாம், எல்லாம் பகிரங்கமாகவே இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டாரோ, என்னமோ?-அதைக் கேட்டுக் கொண்டு இந்த அக்கா என்னை என்ன பாடு படுத்திவிட்டது

கேட்டதையே திருப்பித் திருப்பிக் கேட்டு, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி-அப்பப்பா கல்யாணம் எனக்கா, அதற்கா என்று எனக்கே அல்லவா சந்தேகம் வந்துவிட்டது?

அம்மாவும் அக்காவும்தான் அப்படியென்றால், ஐயாவாவது சும்மா இருக்கக் கூடாதா?-அவர் எனக்கு