பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 71

அவள் விடவில்ல; ‘அதற்குத்தான் மறுபடியும் மணியுடன் சிநேகமாகப் போய்விட்டீர்கள் போலிருக்கிறது?” என்றாள் அவனைத் தன் பார்வையால் ஊடுருவி.

அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான் என்றாலும், அதை அவளிடம் ஒப்புக்கொள்ள அவன் விரும்பவில்லை. எனவே, ‘அவன் என்னை முந்திக்கொண்டுவிட்டால் அதற்கு நான் என்ன செய்வேனாம்?” என்றான் எங்கேயோ பார்த்தபடி.

‘பாவம், உங்களையும் உங்களுடைய வீரத்தையும் நான் ஏன் அனாவசியமான சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் பேசாமல் வீடு போய்ச் சேருகிறீர்களா?” என்றாள் அவள், அனுதாபத்துடன்.

அவளுடைய அனுதாபம் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ‘என்னை வீணாகப் பயமுறுத்தாதே, உனக்குப் பயமாயிருக்கிறதென்றுசொல்!” என்றான், வராத சிரிப்பை வரவழைத்துக்கொண்டு.

‘உண்மைதான்; என்னை யாரிடமாவது விட்டுவிட்டு நீங்கள் ஓடிவிட்டால் என்ன செய்வது என்று நான் பயப்படத்தான் பயப்படுகிறேன்!” என்றாள் அவள், அதற்கும் சளைக்காமல்.

நிலைமை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே வருவதை உணர்ந்த மோகன், ‘போ, பாமா என்னிடம் நீ இப்படியெல்லாம் விளையாடினால் எனக்குக் கெட்ட கோபம் வரும், தெரியுமா?” என்று குழைவோடு இழைந்து, பாதையையே அடியோடு மாற்றப் பார்த்தான்!

அவள் சிரித்தாள்; சிரித்துவிட்டுச் சொன்னாள்: ‘பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டியவர், நீங்கள்!’ அவன் சொன்னான்: அதற்கு நேராகப் பதில் சொல்ல முடியாமல்தான் சொன்னான்;