பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காதலும் கல்யாணமும்

‘'நான்தான் பீதாம்பரம்; ஐயா ஆபத்சகாயத்தைப் பார்க்க வந்திருக்கிறேன்!”

“அவர் வீட்டில் இல்லை; வெளியே போயிருக்கிறார்” “எப்போது வருவார் என்று தெரியுமா?” ‘தெரியாது!” ‘அட, கடவுளே! அவர் வரும் வரை நான் இங்கேயா நின்றுகொண்டிருப்பது? அவ்வளவு நன்றாயிராதே, அது’

‘அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய், நீ?” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே வந்தாள்.

‘அவன் சொல்வது உண்மைதான், அருணா அவனை உள்ளே வந்து மேலே போய் உட்காரச் சொல்!” என்றான் மோகன்

‘ஏனாம்?” “கிட்ட வா, சொல்கிறேன்’ என்று அவள் காதோடு காதாக, ‘அவன் ஒரு பிக்-பாக்கெட்’ என்றான் அவன்.

‘பிக்-பாக்கெட் அப்பாவைத் தேடிக்கொண்டு வருவானேன்?’ என்றாள் அவளும் அவன் காதோடு காதாக. ‘மாஜி போலீஸ் அதிகாரி இல்லையா, நம் அப்பா? அவரைத் தேடிக்கொண்டு வேறு யார் வரப்போகிறார்கள்?” என்றான் அவன், தன் குரலைத் தாழ்த்தி.

“அப்படியானால் அந்தக் காரியத்தை நீயே செய்’ என்று அவளும் தன் குரலைத் தாழ்த்திச் சொல்லிவிட்டு அடுக்களைக்குச் செல்ல, ‘வணக்கம், சின்ன ஐயா!’ என்று கை கூப்பிக் கொண்டே, மோகனுக்கு எதிர்த்தாற்போல் வந்து நின்றான் பீதாம்பரம்.

‘போ போ, மாடிக்குப் போ!’ என்று அவனை மாடிக்கு அனுப்பிவிட்டுக் கீழே உட்கார்ந்தான் மோகன்.

‘சார், சார்!’ என்று இன்னொரு குரல் வந்தது வாசலிலிருந்து. பொழுது போனால் இது ஒரு தொல்லை'