பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 79

என்று முணுமுணுத்துக் கொண்டே, ‘யாரப்பா, அது?” என்றான் அவன், இருந்த இடத்திலேயே இருந்தபடி.

‘'நான்தான் அபேஸ் அய்யாக்கண்ணுங்க!’ என்றான், அந்தக் குரலுக்கு உரியவன் அங்கேயே நின்றது நின்றபடி,

‘வா வா, உள்ளே வா!’ என்று அவனையும் வரவேற்று மாடிக்கு அனுப்பிவிட்டு, ‘கட்சிக்காரர்கள் வக்கீலைத் தேடிக் கொண்டு வருவதுபோல அல்லவா வருகிறார்கள்!” என்றான் மோகன், அலுப்புடன்.

‘அதில் என்னடா சந்தேகம், நான் காப்பாற்றுவது போல வக்கீலால் கூட அவர்களைக் காப்பாற்ற முடியாதே’ என்றார் அவன் அப்பா, அப்போது உள்ளே வந்து.

அவர் சொன்னது உண்மைதான்-பதவியில் இருந்த போதும் சரி, இல்லாதபோதும் சரி; அவரால் நல்லவர்கள் காப்பாற்றப்பட்டார்களோ இல்லையோ, கெட்டவர்கள் தவறாமல் காப்பாற்றப்பட்டு வந்தார்கள்-அதற்குத் துணையாயிருந்தது, அவர் செய்த உத்தியோகம் மட்டுமல்ல; அந்த உத்தியோகத்தால் அவர் அடைந்திருந்த அனுபவமும்

Jo.--.

இதனால் எவன், எங்கே, எதைத் திருடினாலும் சரி, அதை அப்படியே கொண்டு வந்து அவரிடம் சேர்த்துவிடுவான்; அதை வெளியே தெரியாமல் எப்படி அமுக்க வேண்டுமோ, அப்படி அமுக்கி விடுவார், அவர்!

இந்த அமுக்கலில் திருடன் அடைந்த லாபத்தை விட அவர் அடைந்த லாபம்தான் அதிகம் என்றாலும், பல திருடர்கள் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. காரணம், அவர்கள் செய்துவந்த திருட்டுத் தொழில் முதல் இல்லாத தொழில் என்பது மட்டுமல்ல; திருடுவதைவிடப் பதுக்குவது அவர்களுக்குக் கடினமாயிருந்ததும்கூடத்தான்

அந்தக் கடினமான வித்தையை வெகு சுலபமாகச் செய்து வந்தார் அவர். என்ன இருந்தாலும் சமூகத்தில் பெரிய மனிதர் என்ற அந்தஸ்தை அடைந்து விட்டவர் பாருங்கள்;