பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காதலும்கல்யாணமும்

‘பயம் மற்ற விஷயங்களில் இருப்பது சரி; அது இந்த விஷயத்தில் இருப்பது...’

‘அவனுக்கும் நல்லதில்லை, நமக்கும் நல்லதில்லை என்றுதான் அவனை நான் இங்கே அழைத்துக்கொண்டு வரச் சொன்னேன். அதற்குக் குறுக்கே வந்து சேர்ந்தாள், அவள் ஒருத்தி’

‘அந்தப் பெண்ணை நீங்கள் ஒன்றும் கேட்க வில்லையா?”

‘கேட்டேன்; அவள்தான் சொன்னாள், அவன் என் அண்ணன் என்று, ரொம்ப மிரட்டுவாயோ? என்று அவள் வாயைக் கிண்டிப் பார்த்தேன்; ‘பயந்தால் மிரட்ட வேண்டியதுதானே? என்றாள் அவள்’

‘பொல்லாத பெண்ணாயிருக்கும் போலிருக்கிறதே? அப்படியே அது வந்தால்தான் என்ன? எப்படியும் அதற்குத் தெரிந்தது தெரிந்துவிட்டது; அவர் பாட்டுக்கு உள்ளே வந்திருக்கலாமோ இல்லையோ?”

“அந்த அளவுக்கு தைரியம் இந்த நாட்டு இளைஞருக்கு எங்கேடி, இருக்கிறது? நீதிமன்றத்தில்கூட, அவர் என்னை அழைத்துக்கொண்டு போகவில்லை; நான்தான் அவரை அழைத்துக்கொண்டு போனேன்’ என்று ஒடிப்போன காதலியல்லவா ஒடிப்போன காதலனுக்கு முன்னால் வந்து சொல்லி அவனைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது?”

‘அந்த ரகத்தைச் சேர்ந்த இளைஞராய்த்தான் அவரும் இருப்பார் போலிருக்கிறது!-ஏண்டி, அப்படித்தானே?” என்றாள் ராதா, பாமாவின் பக்கம் திரும்பி.

‘அது என்னமோ, எனக்குத் தெரியாது!’ என்று அவளுக்கும் அதே பதிலைச் சொன்னாள் பாமா.

‘செய்வதையெல்லாம் செய்து விட்டு, அதை மறைப்பதாக நினைத்துக்கொண்டு இப்படிச் சொல்வது இந்த நாட்டுப் பெண்களின் வழக்கம். இதனால்தான் இவர்களில்