பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 காதலும்கல்யாணமும்

தான் ஒரு காரணமும் இல்லாமலே இவர்கள் சிரிப்பார்கள் இவர்கள் அழுவதற்கும் அர்த்தம் கிடையாது; சிரிப்பதற்கும் அர்த்தம் கிடையாது. இந்த லட்சணத்தில் இவர்களுடையக் காதல் வாழ்வதற்கா பயன்படும்? சாவதற்குத்தான் பயன்படும்!”

‘ஐயோ, அப்படிச் சொல்லாதீர்கள் அம்மா! அவள் வாழாவிட்டால் நானும் இந்த உலகத்தில் வாழ முடியாது” ‘இப்போது மட்டும் நீ வாழ்ந்துக் கொண்டா இருக்கிறாய்?-இல்லை; உன் தம்பி வாழ்வதற்காக, உன் தங்கை வாழ்வதற்காக நீ வினாடிக்கு வினாடி செத்துக்கொண்டிருக்கிறாய்!”

இதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த சொக்கலிங்கனார், ‘பாரத நாட்டுப் பெண் குலத்தின் பெருமையே அதுதானே?’ என்றார் தம் மனைவியிடம் சிலேடையாக.

‘நன்றாகச் சொன்னீர்கள்; இப்படிச் சொல்லிச் சொல்லித் தான் இந்த நாட்டு ஆண்கள், பெண்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றாள் அவள், அந்தச் சிலேடையைப் புரிந்துகொண்டு.

“உங்களை ஏமாற்ற இன்னொருவர் வேண்டுமா, என்ன? ஒரு பக்கம் ஏமாந்துகொண்டே, இன்னொரு பக்கம் ‘நாங்கள் ஏமாற மாட்டோம் என்று மார்தட்டிக் கொண்டு இருப்பவர்களல்லவா, நீங்கள்?”

“அப்படித்தான் சொல்கிறாள், பாமாவும்!” ‘ஏன், அவள் யாரிடமாவது ஏமாந்துவிட்டாளா, என்ன? ‘

‘இல்லை; ஏமாறப் பார்க்கிறாள்!” இந்தச் சமயத்தில் பாமா கொஞ்சம் துணிந்து, “அப்படியொன்றும் நான் ஏமாந்துவிட மாட்டேன், அம்மா!’ என்றாள், தன் கண்ணிரைத் துடைத்துக்கொண்டே.