பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிந்தன் 7

உள்ளவர்களுக்குக் கூடத் தெரியாமல் அப்போதும் ஆயிரம் இரண்டாயிரம் என்று சம்பாதித்துக் கொண்டே இருந்தார். ஆகவே தனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, ‘'நான் வரவில்லை அப்பா, ரோட்டில் யாரோ வந்து கொண்டிருக்கிறார்கள்!’ என்றான் அவன். அந்த மனிதர் அத்துடன் அவனை விட்டிருக்கக்கூடாதா?-அதுதான் இல்லை; “வருவதாவது, வண்டி நிற்கிறதேடா!’ என்றார் அவர், அப்பொழுதும் அவனை விடாமல். ‘வண்டி நம்முடைய வீட்டில் நிற்கவில்லை; பக்கத்து வீட்டில் நிற்கிறது’ என்று அவனும் விடாமல் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். அவனுடைய போதாத வேளையின் காரணமாக, அந்த நேரத்தில் பரிட்சைக்காகப் படித்துக் கொண்டிருந்தாள், அவன் தங்கை அருணா. அவள் அவனைக் கண்டதும், ‘வண்டி பக்கத்து வீட்டில் நிற்கவில்லை அப்பா...!” என்று ஆரம்பித்தாளோ இல்லையோ, சட்டென்று தன் சட்டைப் பையிலிருந்த ‘சாக்லெட்'டில் ஒன்றை எடுத்து அவள் வாயில் போட்டு மூடினான் அவன். அதற்குள், “எங்கே நிற்கிறது?” என்று கேட்டார் அவர், “எதிர் வீட்டில்!” என்றாள் அவள்1

அரசாங்க அலுவலகங்களில் மட்டுமின்றி, வீட்டிலும் வேலை செய்யும் லஞ்சத்தின் மகிமையைப் பற்றி எண்ணிக் கொண்டே மோகன் சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டுப் படுக்கப் போனான், தன் அறைக்கு.

அப்போது படிக்கும் பெண்ணுக்கு துணையாக அங்கே படுத்துக் கொண்டிருந்த அவன் தாயார், “ஏண்டா, சாப்பிடவில்லையா?” என்று சைகையின் மூலம் கேட்டாள், அவன் காலைச் சீண்டி.

அவளை நன்றியுணர்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்து விட்டு வேண்டாம் அம்மா, நான் சாப்பிட்டு விட்டேன்!” என்று தானும் பதிலுக்குச் சைகை காட்டிவிட்டுப் படுக்கையை எடுத்து விரித்தான் அவன்.