பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காதலும்கல்யாணமும்

‘ஏன், இவளுடைய தந்தையைப் பார்த்ததும் அவன் மூர்ச்சையாகியிருப்பான். இவள் ஓடோடியும் வந்து அவன் தலையைத் தூக்கித் தன் மடியின் மேல் வைத்துக்கொண்டு, “இங்கே பாருங்கள், அப்பா போய்விட்டார்; இனிமேல் நீங்கள் தைரியமாகக் கண்ணைத் திறக்கலாம்’ என்று சொல்லியிருப்பாள்; உண்மைதானே, பொய்யில்லையே? என்று ஒரு முறைக்கு இரு முறையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அவன் கண்ணைத் திறந்திருப்பான்!-என்ன பாமா, அப்படித்தானே?”

அவ்வளவுதான்; ‘களுக்கென்று சிரித்துவிட்டாள் அவள் அவரும் அவளுடன் சேர்ந்து சிரித்தபடி, ‘குற்றம் இவள் மீதுமில்லை; அவன் மீதுமில்லை. இந்தக் காலத்து நாகரிகம் அப்படி!-பேண்ட்டும் கோட்டும் அணிந்துக் கொண்டுவிட்டால் நாகரிகம் முடிந்தது என்று ஆண்கள் நினைத்துவிடுகிறார்கள்; கலாசாலை வாசலில் கால் வைத்துவிட்டால், நாகரிகத்தின் சிகரத்தையே எட்டிப் பிடித்துவிட்டோம்’ என்று பெண்கள் நினைத்து விடுகிறார்கள். உண்மையில், நாகரிகம் என்றால் என்ன?” என்பதே இவர்களுக்குத் தெரிவதில்லை. தெரிந்தால் இவர்கள் எதைக் கண்டும் ஒடமாட்டார்கள்; ஒளிய மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு குறிக்கோளுக்காக இவர்கள் எதையுமே நேருக்கு நேராகச் சந்திப்பார்கள். சந்தித்து, தாங்கள் கொண்டக் குறிக்கோளில் வெற்றியும் காண்பார்கள். அத்தகைய வெற்றியைத்தான் நம்முடைய காதலில் நாம் கண்டோம். அதே வெற்றியை இவர்களுடைய காதலில் இவர்களும் காணவேண்டுமானால், இவள் மட்டும் தன் அக்காவுக்குத் தெரிந்து அவனுடன் பழகினால் போதாது; அவனும் தன் அப்பாவுக்குத் தெரிந்து இவளுடன் பழக வேண்டும். அதற்கு முதற்படியாகத் தான் இன்று இவள் அவனுடைய காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு இங்கே வருவாள் என்று நான் எதிர்பார்த்தேன்; ஏமாற்றி விட்டாளே?” என்றார் இரு கைகளையும் விரித்தபடி.