பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 காதலும்கல்யாணமும்

‘வேறு என்ன செய்து வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டபடி, மீனாட்சியம்மாள் அவளை நோக்கித் திரும்பினாள்.

‘'காரத் திரிகோணம் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று பாமா சொன்னாள்; அதற்காக அது கொஞ்சம் செய்து வைத்திருக்கிறேன்!” என்றாள் ராதா.

‘எடுக்கும் போதே காரம் மட்டுமா?” என்று கேட்டார் சொக்கலிங்கனார்.

‘இல்லை, இனிப்பும் செய்து வைத்திருக்கிறேன்!” என்றாள் அவள்.

“என்ன இனிப்பு?”

‘கேசரி’

‘சரி, அவற்றைச் சாப்பிட்டு வைக்க இப்போது உனக்கு ஆட்கள் தேவை. அவ்வளவுதானே? கொண்டு வா, வாழ்க, பாமா, மோகன்’ என்று வாழ்த்துக் கூறிக்கொண்டே சாப்பிடுவோம்’ என்று உட்கார்ந்தார் அவர்; அவரைத் தொடர்ந்து மீனாட்சியம்மாளும் உட்கார்ந்தாள்.

14. அபாய அறிவிப்பு

பொழுது விடிவதற்கு முன்னால் எழுந்து ஓரிரு மைல்கள் ஓடிவிட்டு வந்து குளிப்பது மணியின் வழக்கம். உடற்பயிற்சிக்காகக் கைக்கொண்டிருந்த அந்த வழக்கத்தை யொட்டி, அன்றும் ஓடி விட்டு வந்து அவன் குளித்துக் கொண்டு இருந்தபோது, “சார் சார், உங்களுக்கு ஓர் அபாய அறிவிப்பு’ என்றான் சங்கர்.

“என்ன, ஒட்டல் முதலாளி சோற்றில் சுண்ணாம்பைக் கலந்துகொண்டு இருக்கிறாரா? இல்லை, சாம்பாரில் விழுந்த கரப்பானைத் தூக்கி வெளியே போட்டுக்கொண்டு இருக்கிறாரா?’ என்று மணி கேட்டான்.