பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 91

‘இரண்டுமில்லை; உங்களுக்கு அடுத்தாற்போலிருக்கும் அறையில் புது காதல் ஜோடியொன்று குடியேறியிருக் கிறது!” என்றான் அவன்.

அவ்வளவுதான்; ‘அந்தச் சனியன்களுக்கு வேறு அறை யொன்றும் இல்லையா. இங்கே?’ என்று இரைந்தான் மணி. ‘இருந்தால் உங்களுக்குப் பக்கத்தில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனா, சார்?’ என்றான் அவன். ‘

‘சரி, கல்யாணமான காதல் ஜோடியா? இல்லை, கல்யாணமாகாத காதல் ஜோடியா?”

‘கல்யாணமாகாத காதல் ஜோடி என்றுதான் நினைக்கிறேன்!”

‘அப்படிப்பட்ட ஜோடிகளுக்குக் கூடவா இங்கே இடம் கிடைக்கிறது?”

‘ஏன் சார், கிடைக்காது? அந்த விஷயத்தில்தான் நம்முடைய ஒட்டல் முதலாளி டபிள் எம்.ஏ. வாயிற்றே?”

‘அது என்னடா அது, டபிள் எம்.ஏ.?” ‘உங்களுக்குத் தெரியாதா, grmi? இரண்டு எம்.ஏ.க்களைச் சேர்ந்தாற்போல் ஆங்கிலத்தில் எழுதிப் படித்தால் என்ன வருமோ, அதுதான் சார் அது!”

‘அடப் பாவி! இது எந்த சர்வகலாசாலைப் பட்டம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மணி.

‘தெரியாது சார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரைப் பற்றிப் பேசும்போது அப்படித்தான் பேசுகிறார்கள்’

‘அவ்வளவு கேவலமான மனிதரா, அவர்?” ‘அவர் என்னமோ நல்லவர்தான் சார், பணம் அவரை அந்தப் பாடுபடுத்துகிறது!’

‘அதற்காக?"