பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 97

‘இப்போதுதான் தெரிகிறது எனக்கு, காதலிப்பதற்கே நாம் லாயக்கில்லை என்று’

‘நாம் என்று சொல்லாதீர்கள்; நான் என்று சொல்லுங்கள்’

‘நன்றி, உன் திருத்தத்துக்கு, ஆனால்...’

“ஆனால் என்ன?”

‘கனி கண்டவன் தோல் உரிக்கக் காத்திருப்பதில்லை என்பது கவிஞன் வாக்கு; கடவுள் வாக்கும், கவிஞன் வாக்கும் பொய்ப்பதில்லை என்பதை நீ உணர வேண்டும்!”

‘'நான் கனி அல்ல; கன்னி’

‘தெரியும்; அதனால்தான் இந்த ஒட்டல் அறைக்கு உன்னை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். இல்லாவிட்டால் தெருவிலேயே தோலை உரித்து எறிந்துவிட்டுக் கனியை விழுங்கியிருக்க மாட்டேனா, நான்?”

அவள் சிரித்தாள்; “ஏன் சிரிக்கிறாய்?’ என்று அவன் கேட்டான்.

‘ஒன்றுமில்லை. கணிக்கு மட்டுமென்ன, கன்னிக்குக் கூட உங்களைப் போன்றவர்களுக்குத் தெருவே போதும் என்று நினைத்தேன்; சிரிப்பு வந்துவிட்டது’

“சீச்சீ அவ்வளவு மட்டமாகவா நினைத்துவிட்டாய், என்னை? ‘ -

‘'உயர்தரமாக நினைப்பதற்குத்தான் ஒன்றுமே இல்லையே, உங்களிடம்

‘ஏன் இல்லை, எத்தனையோ இருக்கிறது!”

“எத்தனை இருந்து என்ன பிரயோசனம்? அந்த ஒன்று இல்லையென்றால் அத்தனையும் வீணே’

‘எந்த ஒன்று’

‘புத்தி'