103
ச:— (பயந்து) ஏன்—ஏன்—என்னடா பொன்னா!
பொ:— பிணமாவா கிடப்பான் தங்கவேலு! பஸ்பம் ஆகிவிடமாட்டானா...
ச:— ஆமாமாம்... உருத்தெரியாதபடி ஆகிவிடும்...
பொ:— சாமி உங்களுக்கு ஒருத்தன் விரோதம் செய்தபிறகு, விட்டு வைக்கலாமா உயிரோடே! சுட்டுச் சாம்பலாக்காமலா இருப்பேன்... சாமியோய்! இந்தப்பய, தங்கவேலு! ரொம்ப வாலாட்டம் காட்டினானா...
ச:— ஆமாண்டா பொன்னா! என் குடும்பத்துக்கே, கேவலமான நிலையை உண்டாக்கத் துணிவு கொண்டு விட்டான்...
பொ:— யாரு? இந்தப் பயலா!
ச:— ஆமாம்... உன்னண்டே சொல்றதிலே என்ன தப்பு...என்மக, இருக்காளே சுகுணா, மெட்ராசிலே...
பொ:— புருஷன் செத்துப்போயிட்டாரே...
ச:— அவதான் அவ பாவம், சிவனேன்னு காலந் தள்ளிண்டு, தனக்கு ஏற்பட்ட விபத்தை எண்ணிஎண்ணி விம்மிண்டு, ஏதோ பரோபகாரமான டாக்டர் தொழில் செய்தாவது போறகதிக்கு நல்லது தேடிக் கொள்ளலாம்னு இருந்திண்டிருக்கா — இந்தப் பயலோட திமிரைப்பாரு...சுகுணாவைச் சுத்திச் சுத்தி வட்டமிட்டுண்டு, பார்க்கறது, பேசறது, சிரிக்கிறது, இப்படி சேஷ்டை செய்துண்டு வந்தான்...
பொ:— பாருங்களேன், போக்கிரித்தனத்தை—யார் வீட்டுப்பொண்ணு, என்னா குலம், என்ன மாதிரியான நிலைமை, இது எதையும் கவனிக்காம...
ச:— திமிருடா பொன்னா! யார் என்ன செய்ய முடியும் என்கிற கர்வம்—சுகுணா, சூது தெரியாதவ — எப்பவும் யாரிடமும் களங்கமில்லாமெ சிரிச்சுப் பேசுவா — இந்தப்பய, அதைச்சரியா புரிஞ்சுகொள்ளாமப்படிக்கு சுகுணா தன்னைக்