பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

பொ:— இண்ணைக்கோட, எனக்கும் உனக்கும் இருந்த சம்பந்தம், சினேகிதம் தீர்ந்துப் போச்சு. இனி நீ, எக்கேடாகெடு, என்ன பாடோ, எனக்கென்ன... சனியனே!

(போய் விடுகிறான்)

காட்சி—31

[சம்பந்தன் வீடு—பொன்னன், தங்கவேல் உரையாடல்]

த:— என்ன கல்மனசு பொன்னா உனக்கு....

பொ:— கோபம் வந்துட்டா அப்படித்தான் எனக்கு. கண்மண் தெரியறது இல்லை. பொன்னியைத் திரும்பிக்கூடப் பார்க்கறதில்லே. மிராசுதாரனோட வேலையும் முடிஞ்சுது. பொன்னியோட ஞாபகம் வந்து குடையுது — ஆனா வெட்கமாகவும் இருந்தது. எப்படி மறுபடியும் அவளோடு பேசுவதுன்னு பயமாயுமிருந்தது.

த:— அந்தப் பொண்ணு தத்தளிச்சிருக்கும்.

பொ:— நான் உண்மையாகவே மோசம் செய்து விட்டேன்னு தீர்மானிச்சி, உயிரைப் போக்கிக் கொள்றதுன்னு துணிஞ்சி, தூக்கு மாட்டிக்கிட்டா. நல்ல வேளையா பக்கிரி காப்பாத்தினான்—என் கண்ணையும் திறந்தான்—எனக்கும் தைரியம் பிறந்தது. இடையிலே நான் முரட்டுத்தனமா நடந்துகொண்டேனே தவிர. எனக்குத்தான், ஆரம்ப முதல் பொன்னியிடம் உண்மையான அன்பு இருந்து வந்ததே. அதனாலே பக்கிரி சொன்ன யோசனைப்படி, தாலி கட்டிவிட்டேன். பொன்னியோட வாழ்வு நல்லவிதமாச்சி. நானும் புது மனுஷனாகிவிட்டேன். இது தான் என் காதல் கதை. சந்தைத் தோப்பு, குடிசை வீடு, சல்லாபம், சண்டை, இப்படி நம்ம காதல் கட்டம்