பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137

யோசனை சொன்னாங்க—சரின்னு ஒப்புக் கொண்டேன்.—ஒப்புக்கொண்டேனா— யாரை டான்சுக்குப் கூப்பிடறது—அதுவும் என் தலையிலே — தங்கவேலுதான் நல்ல டான்சுக்காரியை ஏற்பாடு செய்ய வேணும்னு சொல்லிட்டாங்க—என்ன செய்யறது. அதுக்கும் சரின்னு சொல்லிவிட்டு, ஓரு ஆசாமியை அழைச்சிகிட்டு—அவனுக்கு இந்தமாதிரி விஷயத்திலே பழக்கம்—டான்சு ஆடுகிறவர்களைத் தேடப் பொறப்பட்டேன்.

பொ:— (தங்கவேல் முதுகைத் தட்டியபடி) பலே ஆளப்பா நீ... சொல்லு, சொல்லு...டான்சுக்கு ஆள் தேடப் படை எடுத்தே...என்னா நடந்தது!...

த:— (சிரித்தபடி) அந்தக் கூத்தை ஏன் கேக்கறே, போ! அந்த சனியன் பிடிச்சவன் ஒவ்வொரு இடமா அழைச்சிகிட்டுப் போனான்! ஒரு கண்றாவியா பார்த்தேன்...!சகிக்கில்லே சிலது...ஒரு இடத்திலே எனக்குச் சிரிப்புத் தாளாமப்படிக்கு, ‘ஓ’ன்னு சிரிச்சிக்கூடப் போட்டேன். அந்தப் பொம்பளையோட அம்மா பிடிச்சிகிட்டது சண்டைக்கு...

காட்சி—33

(பழைய சம்பவம்—ஒரு நாட்டியக்காரி வீடு)

[தங்கவேல், ஒரு தரகன், நாட்டியமாடுபவள். நடன ஆசிரியன், நாட்டியமாடுபவள் தாய் ஆகியோர் உள்ளனர்.

நாட்டியமாடுபவள் நடுத்தர வயதுடையவள். கனமான சரீரம்—களையற்ற முகம்.

அவள் ஆடுவதை, தாயும் ஆடல் ஆசிரியனும் பாராட்டுகிறார்கள். தரகன், தங்கவேலுவின் அதிருப்தியைத் தெரிந்துகொண்டு திகைக்கிறான்.]

உனைத் தேடித் தேடி தேடி ஓடினேன்
ஊரெல்லாம் உலகெல்லாம். (உனைத் தேடி)

கா. ஜோ—9