பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ச:— கண்ணைப் பறிச்ச தெய்வம், கோல் கொடுக்காமப் போகுமா... சரி...உன் மகன் என்ன செய்திண்டிருக்கான்...

தா:— (வருத்தமாக) அந்தக் கண்றாவியை ஏன் கேக்கறிங்க...... டிராமா ஆடராங்களே, அதுகளோட சேர்ந்துகிட்டுச் சுத்தறான்...பபூன் வேஷமாம்...

ச:— அதனாலே என்னடா, தாண்டவா! பபூன் சாமண்ணா ஐயர்ன்னு கேள்விப்பட்டிருக்கயோ... பிரமாதமான பேர்!

தா:— இப்ப யாரோ என். எஸ். கிருஷ்ணன்னு இருக்காராம்... அவருக்குத்தான் பிரமாதமான பேராம் — சொல்றான் நம்ம பையன்...

ச:— (முகத்தைச் சுளித்தபடி) ஆமாம்.. சொல்றா...அப்படித்தான்...சரி, பொண்ணு பொன்னி என்னமா இருக்கா?

தா:— (வருத்தமாக) பொலம்பிகிட்டு கிடக்குது! போன வருஷம் தாலி அறுத்துட்டுதுங்க...

ச:— கர்ம பலன்—என்ன செய்யறது— நீ மகா உத்தமன். உனக்கு ஒரு குறையும் வராது. ஊருக்கு எப்ப போகப்போறே?

தா:— காலங்கார்த்தாலே புறப்பட வேண்டியதுதான் சாமி! சின்ன ஐயரு எங்கே இருக்காரு—கண்ணிலேயே இருக்குதுங்க — பார்க்கவேணும்னு ஆசை...

ச:— சின்ன ஐயர், சீமை போயிருக்கான், என்ஜினியர் பரீட்சைக்குப் படிக்க... அடுத்த வருஷம் வருவான்... ஆயிரம் ரூபாய் சம்பளம்டா சின்ன ஐயருக்கு... சந்தோஷம்தானே உனக்கு...

தா:— ரொம்பச் சந்தோஷம்...அவருக்கென்னங்க தங்கக் கம்பி...

ச:— மாட்டுப் பொண்ணு, பெரிய இடண்டா, தாண்டவா! உன்னிடம் சொல்றதிலே நேக்குப் பரம திருப்தி...ஜட்ஜு