பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

தேன்—சினிமாக்காரரு நான் டான்சருக்குத் தெரிந்தவன்னு எண்ணிக் கொண்டாங்க போலிருக்கு—டான்சரு, நான் சினிமாக்காரருக்கு வேண்டியவன் போலிருக்குன்னு எண்ண வேண்டியதுதானே — ஆக மொத்தம், என்னை யாரும், யாரு என்னன்னு கேட்கலே — மேலும் நான் பட்டாள ‘டிரசிலே’ போகலே...

காட்சி—35

(பழைய சம்பவம் — நாட்டியமாடுபவள் வீடு)

(இருபது வயது மதிப்பிடத்தக்க பெண் ஆடிக்கொண்டிருக்கிறாள். டாம்பீகமாக உடையணிந்த நாலைந்து பேர், உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நடனம் ரம்மியமாக இருக்கிறது. தங்கவேல், உள்ளே நுழைந்து, உட்கார்ந்து நடனத்தை ரசிக்கிறான் நடனம் முடிந்ததும், நாலைந்து பேரில் ஒருவர், சில நோட்டுகளைத் தட்டிலே வைத்துவிட்டு)

ஒரு:— திருப்தியாகவே இருக்கு... நாளைக்கு மறுநாள்—

இன்னொருவர்:— வெள்ளிக்கிழமைதான் நான் இருப்பேன்...

ஒரு:— சரி, வெள்ளிக்கிழமை, கார் அனுப்புகிறேன் — வந்துவிட்டால், எல்லாம் பேசி முடித்து விடலாம்...

பெண்:— சரிங்க...

(அவர்கள் விடைபெற்றுக்கொண்டு போகிறார்கள். தங்கவேல் மட்டும் போகவில்லை. இதைக் கண்டு, பெண்ணும், அவளுடன் இருந்த ஒரு முதியவரும், தங்கவேலுவைப் பார்த்து)

பெண்:— நீங்க...

முதி:— ஆமா, நீங்க...