149
கண்ணுக்குக் கட்டழகராகத்தான் தெரிவார் — என்னை மயக்கினார்... மயக்கினார்னு இப்ப சொல்கிறேன் — அந்த நாளிலே, அண்ணா! எனக்கு அவர் கண்கண்ட தெய்வமாகத் தெரிந்தார்... என்னை அவரிடம் ஒப்படைத்தேன்—பரிபூரணமான நம்பிக்கையோட — பச்சை மரங்களெல்லாம் சாட்சின்னு சொன்னாரு— பால்போலக் காய்கிற நிலவு சாட்சின்னு சொன்னாரண்ணா பயந்தபோது பைத்யமே பைத்யமே!ன்னு சொல்லி, ஒரு பெண்ணோட மனம் பாகா உருக என்னெள்ள சொல்லலாமோ, அதை எல்லாம் சொன்னார்—எப்படி எப்படி நடக்கவேணுமோ அப்படி எல்லாம் நடந்தாரு...
முதி:— என்னிடம் இவ்வளவு விவரமாச் சொல்லலியேம்மா...
தங்:— பாவம்...அடடா! இப்படி எல்லாம் நடந்தவன்...
பெண்:— காதலனா இருந்தவர். காரியம் கைகூடிய பிறகு, ஆடவராகி என்னை ஆட்டக்காரியாக்கி விட்டார் அண்ணா.
தங்:— எனக்கு உள்ளபடியே வருத்தமா இருக்கு...
பெண்:— கோபமா இருக்குமோன்னு பார்த்தேன் — ஆடவனாகி விட்டார்னு சொன்னேனே, நீங்களும் ஒரு ஆடவராச்சே-என்ன எங்க குலத்தையே கேவலமாப் பேசறியேன்னு, கோபிக்கப் போறீங்களோன்னு பயந்தேன் என் வேதனையாலே அப்படிச் சொன்னேன், பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் ஆண்கள் காட்டுகிற கொடுமையை எண்ணி அப்படிச் சொன்னேன்...
தங்:— உன் பேச்சை மறுக்கவில்லை, பொற்கொடி! ஆனா, இப்ப காலம் மாறிக்கொண்டு வருதம்மா. பெண்களைக் கொடுமைப்படுத்துகிற ஆண்களோட தொகை குறையுது...
பெண்:— அதுவரையிலே சந்தோஷம்தான்— என்னைக் கர்ப்பவதியாக்கிவிட்டு பட்டாளத்துக்குப் போனார் — அவர் திரும்பி வருவதற்குள்ளே நான் ஒரு தாய் ஆனேன் — தாலி இல்லை கழுத்திலே, கையிலே ஆண் குழந்தை, அவரை அப்படியே உரிச்சு வைத்ததுபோல்—வீட்டிலேயோ, ஊரிலேயோ இருக்க முடியுமா—விவரம் சொன்னா வீண்பழி சுமத்தாமலா இருப்பாங்க — அதனாலே என் சினேகிதி