பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

...இலங்கைக்குத் தூது போனார் அனுமார்... என்ன செய்தார்! இராவணன் செய்த அக்ரமத்துக்காக, இலங்கையையே கொளுத்திவிட்டார். இல்லையா...நியாயமா அது...? இலங்கா தகனம். இலங்கா தகனம்னு.... கொண்டாட்டமாத்தான் பேசிக் கொள்கிறோம்....ஆனா, நீங்க இப்பச் சொன்னது போல; இதுவும் அக்ரமம்தானே!....

ச:— (கோபமாக) ஏம்பா! நீ, என்ன, இந்தச் சூனாமானாவோ?... வேலா?... வீண் வேலை நமக்கேன், வா, போவோம்.

வே:— ஏஞ் சாமி ! இந்தப் பய வாயை அடக்கவா முடியாது— எடுத்து வீசுங்க, ஒரு பதிலு...

(ஐயர் போகிறார் தனியாகவே)

வே:— அடே..ஐயரு. என்ன வாயை மூடிகிட்டுப் போய்ட்டாரு...ஏண்டா, தம்பி! அவரை மடக்கிப் போட்டுட்டயே பேச்சாலயே. நீ சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு, யோசனை செய்து பார்த்தா...

சி:— யோசனை செய்து பார்க்கிற வழக்கம்தானே கிடையாது. நம்ம ஜனங்களிடம்...

வே:— படிச்ச, சாதி, உசந்த ஜாதி, மேதாவிங்க. அதனாலே, அவங்க எதாச்சும் சொன்னா நம்ம ஜனங்க நம்பறாங்க.

சி:— மேதாவிங்க !.. என்ன இங்க! இங்கே, நாம்தான். இவங்களை மேதாவிங்க, மேல் குலத்தவங்கன்னு புகழ்ச்சியாச் சொல்றோம், உண்மை புரியாததாலே... ஆனா, இந்த மேதாவிங்களோட பேச்சு, கேட்டா, உலகத்திலே, சிரிப்பாகச் சிரிக்கிறாங்க.

வே:— ஏனாம். எதுக்காக...

சி:— எதுக்காகவா? இப்படி ஒரு பைத்தியக்காரக் கூட்டம் இருக்கான்னுதான்... நாம்தான் இவங்களை, மேதாவிங்க. ஞானஸ்தாள், குரு, அப்படி இப்படின்னு கொண்டாடு-