பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

துன்னு சொல்லுவேபோல இருக்குது. நல்ல நியாயம்டாப்பா! நல்ல நியாயம்!!

த:— காலம் போற போக்குத் தெரியாததாலே, நீ பயப்படறேப்பா... இது சகஜம் இப்ப..

ச:— நிலைமை தெரியாம, நீ, தடுமாடுரே தங்கவேலு...ஏண்டா, என்னமோ ஐயர் வீட்டம்மா, அவசரத்திலே, ஆசை மிகுதியிலே, சொல்லியிருப்பாங்க, கல்யாணம் செய்து கொள்றேன்னு—நீ எப்படிடா சரின்னு சொல்லலாம். நாம்ம என்ன குலம்... நம்ம நிலைமை என்ன. எப்படிடா, உனக்குச் சரின்னு பட்டுது, இந்தக் காரியம். சொன்னாலே, ஊர் சிரிக்கும்—ஐயரோட செல்வாக்கு எவ்வளவு—நம்மை உருவில்லாமச் செய்துட முடியுமே அவராலே—ஊரைவிட்டே ஓட்டிவிட முடியும்டா அவராலே...நீ, சொல்றே, ஐயர் வீட்டம்மாதான், கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சாங்க; அவங்கதான் தைரியமா இருக்காங்கன்னு—ஊரிலே அப்படியா சொல்லுவாங்க... சம்பந்தம் மகன் ஐயர் வீட்டம்மாவை எப்படியோ, மயக்கிக் கெடுத்துப் போட்டான்னுதானே தூற்றுவாங்க..ஊர்ப்பகை சும்மா விடாதேடா நம்மை...

த:— வீணான பயம்பா உனக்கு.. அப்பா தடுத்தாலும், ஆகமதைக் காட்டினாலும், அண்ணன் தடுத்தாலும். சாஸ்திரத்தை நீட்டினாலும், என் உறுதியைக் குலைக்க முடியாது. உலகத்து நடவடிக்கையைத் தெரிந்து கொள்ளாத கிணத்துத் தவளைகளுடைய எதிர்ப்பைக் கண்டா, அறிவாளிகவெல்லாம், கைகொட்டிச் சிரிப்பாங்க. ஜாதியாவது ஜாதி! நான் டாக்டர்! எங்க குலத்துக்குன்னு இருக்கே வேதம்...ஒண்ணுக்கு நாலு!... அதிலே எதிலேயாவது ஆதாரம் இருக்கா டாக்டர் வேலைக்குப் படிக்கலாம் என்பதற்கு? என் அண்ணன் சீமை போயிருக்கான்... போகலாமோ.. எங்க குல ஆசாரப்படி?..என்றெல்லாம் சுகுணா சொன்ன பிறகுதானப்பா, எனக்கும் பயம் போய் தைரியம் பிறந்தது.

ச:— உன் பேச்சைக் கேட்டா அழகாத்தாண்டா இருக்குது தங்கவேலு? ஆனாலும், ஊரோட போக்கைப் பார்த்தா