இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
தர்மம்— அந்தத் தர்மத்தின்படி நடக்கிறபோது, அதனாலே சாஸ்திரத்துக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டாலும் தோஷமில்லேன்னு தீர்மானிச்சேன் — பொண்ணு இப்ப சௌக்யமா இருக்கிரு...
பொ:— அதுதானுங்களே முக்யம்..
ச:— நம்ம சௌகரியத்துக்குத்தானே எல்லா சாஸ்திரமும்...! அதனாலே பயமே வேண்டாம்—கல்யாண ஏற்பாட்டைக் கவனி—போ.,,
காட்சி—8.
இடம்: ஆண்டானூர்—கலியாண மண்டபம்.
இருப்போர்: மணமக்கள், பக்கிரி, தாண்டவராயன், மற்றும் சிலர்.
(பொன்னன் பொன்னி திருமணக் கோலத்துடன் உள்ளனர். மாலை மாற்றிக்கொள்கின்றனர் வாத்ய இசை கேட்கிறது, பக்கிரி மகிழ்ச்சியுடன் காணப்படுகிறான். பொன்னி கண்களில் நீர் தளும்பிய நிலையில், தாண்டவராயன் காலிலே வீழ்ந்து வணங்குகிறாள். பக்கிரி, பொன்னனைக் குறும்பாகப் பார்க்கிறான். பொன்னனும், தாண்டவராயன் காலில் விழுந்து வணங்குகிறான். பக்கிரி வந்தவர்களுக்கு வெற்றிலை பாக்குக்கொடுத்து அனுப்புகிறான்.)