பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

அக்கறை எல்லாம் கற்பூரம் விற்பனையாகணும் இலாபத்தோ என்கிறதே தவிர, கற்பூரத்தை கணபதிக்குக் கொளுத்துறாங்களா, காளிக்கா, கண்ணனுக்கா. முருகனுக்கா, மூக்காயிக்கா என்பதுபற்றி அவனுக்கு என்ன அக்கறை. ஏன் ஏற்படவேணும், அந்த அனாவசியமான அக்கறை? படம் பிடிக்கறது ஒரு தொழில்; பள்ளிக்கூடமா அது? இல்லயான பார்லிமெண்டா; புது சட்டப் போடற இடமா? பைத்யம், பைத்யம். நான் ‘ஆக்ட்’ செய்ற ‘காதல் ஜோதி’ கதையைப் படிச்சாளாம், தைரியம் வந்ததாம், ஜாதியைக் கெடுத்துக் கொள்ள.

சு:— உங்க தொழிலின் இரகசியமும் தெரியுது; உன் போக்கும் நன்னா புரியறது. ஆனா வேற ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளல்லே நீங்களெல்லாம். சோப் வியாபாரம் செய்கிறானே அவன், உடல் அழுக்காக்கூட இருக்கும். ஆனா, அவன் விற்கிற சோப்பை வாங்கி உபயோகப் படுத்துகிறாங்களே பல பேர், அவர்களோட அழுக்கை எல்லாம் சோப் போக்கிவிடுது. அதுபோலத்தான், இலாபத்துக்காக ஆசைப்பட்டு படம் எடுக்கிறீங்க. கொள்கையிலே துளிகூட பற்றுக் கிடையாது. ஆனாலும், படங்களைப் பார்க்கிற ஜனங்களோட மனதிலே புதுமையான எண்ணம், புரட்சியான எண்ணம், பொன்னான எண்ணம் பூத்துவிடுது. அழுக்குப் போகுது அண்ணா! சோப் வியாபாரிக்கு அல்ல; சோப் உபயோகிக்கிறவங்களுக்கு.

அ:— சுகுணா வாயாடினது போதும். விபரீதமான காரியம் எதுவும் செய்துவிடாதே. இப்ப நீ, என்னிடம் பேசினதை லேடிஸ் கிளப்பிலே பேசு, கை தட்டுவா; ரிபப்ளிக்லே எழுது, பாராட்டுவா. ஆனா, அசட்டுத்தனமாக இவனைக். கல்யாணம் செய்து கொள்ளாதே. ஊர் பூரா உன்னோட பைத்தியக்காரத்தனத்தைக் கண்டிக்கும்; சபிக்கும்.

சு:— ஊர்லே, இரண்டு கட்சி இருக்கு அண்ணா. இல்லே, இல்லே மூணு இருக்கு. ஒண்ணு எங்க கட்சி; அதாவது சீர்திருத்தக் கட்சி. இன்னொண்ணு வைதீகக் கடசி, உங்க கட்சி; மூணாவது—இரண்டு கட்சியையும் ஏமாத்ற சுயநலக் கும்பல்.

கா. ஜோ.—6