பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

எடுத்தா, தடுக்கவேணும். நியாயம். உலகத்திலேயாகட்டும், நம்ம தேசத்திலே ஆகட்டும், மேதாவிங்க, இந்தக் காலத்துக்கு எது எது சரின்னு சொல்றாங்களோ, அதை எல்லாம் விளக்கித்தானே படம் எடுக்கறோம்.

அ: (அசடு தட்ட) நீங்க சொல்றது, சரி! ஆனா நல்ல புராணக் கதையா, படம் எடுத்தா; ஜனங்களுக்கு, நல்லது செய்யும்னு சொல்றா...

மு:— இது என்னய்யா புத்தம் புது யோசனையா! ஒண்ணு பாக்கியில்லாமே எல்லாப் புராணமும் எடுத்தாச்சே—பக்த துருவன் முதற்கொண்டு பக்த கோராகும்பர் வரையிலே எடுத்தாச்சி— ராமாயணத்தை, மூலை முடுக்கு விடாமே படம் எடுத்தாச்சி—பாரதத்தையும் விடலே, பாகவதக் கதை எல்லாம் எடுத்தாச்சி, திருநீலகண்டரு, திருமழிசை ஆழ்வாரு, ஆண்டாள் சரித்திரம், ஐயனாரப்பன் கதை, எது எடுக்காம விட்டிருக்கு. வல்லாள மகாராஜா வந்தாச்சி. காரைக்காலம்மையாரைக் காட்டியாச்சி கண்ணப்ப நாயனார் படம் எடுத்திருக்கிறோம், சிறுத்தொண்டரு, சிவகவி, வாமனாவதாரம், பிரகலாதா, அகல்யா, அனுசூயா, தாராசசாங்கம் எல்லாம் காட்டியாச்சி, எந்தப் புராணத்தைக் காட்டலே—எந்தப் புண்ய கதை காட்டலே. பட்டனத்தார் படம் எடுக்கலியா, தாயுமானவரைக் காட்டலையா, சொல்லு, அருள்குமார், என்ன புண்ய கதையை வேண்டாம்னு சினிமாக்காரரு தள்ளிவிட்டாங்க. மறுபடியும், அதையே திருப்பித் திருப்பி படமாக்கறதா...

அ:— (முகம் சுளித்தபடி) அது முடியுமா..?

மு:— முடியுதா, இல்லையா, என்கிறது இல்லைய்யா...புராணம் தவிர வேறே தேவை இல்லைன்னா, ஏற்கனவே எல்லாப் புராணமும் இருக்கறதாலே, படம் பிடிக்கிற தொழிலையே நிறுத்திவிட்டு, ஏற்கனவே உள்ள புராணப் படங்களையே திரும்பத் திரும்ப சினிமாவிலே காட்டி கிட்டே இருந்துவிடலாமே—பணம் மிச்சம்—வேலை மிச்சம்—சௌகரியமாப் போயிடுமே... யோசனை சொல்ல வருகிறாங்க பாரு...யோசனை புராணப் படம் எடுக்கணு-