பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

னுங்க—முடியல்லே...நாலு நாளையிலே கொணமாயிடும்—பிறகு போலீசிலே கேஸ் எடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்யறேன்...

ச:— பேசாதடா தங்கவேலு! பேசாதே......வலி அதிகமாயிடும்

த:— படுபாவிப்பய, எதிரே வந்து நின்னு சண்டை செய்திருந்தா, ஒரு கை பார்த்திருப்பேன் — பின்பக்கமா வந்து அடிச்சிட்டான்...

ச:— போக்கிரிகளோட வேலையே அது தான் — அக்ரமக்காரனுங்க வேலை இப்படித்தான்—ஒளிஞ்சி இருந்து. மறைஞ்சு இருந்து; தாக்குவானுங்க...

த:— அப்பேர்ப்பட்ட அவதார புருஷரு ராமரே, வாலியை மறைஞ்சிருந்துதானே சாகடிச்சாரு என்கிற எண்ணம் போலிருக்கு, அந்தக் காவாலிப் பயலுக்கு...

காட்சி—20

இடம்:— ஐயர் வீடு.

இருப்போர்:— ஐயர், பொன்னன்.

ஐ:— பொன்னா! விஷயம் விபரீதமாயிடுமோன்னு எனக்கு ஒரே திகிலா இருக்கு —நீ, அந்தப் பயலை தாக்கினதைக் கண்ணாலே பார்த்துட்டான் தோட்டக்காரத் துரைசாமி — அவன் வாய் அறுதலேன்னோ — அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லி, கொஞ்சமும் பணமும்கொடுத்து, வெளியூருக்கு அனுப்பிவிட்டேன். இனி அவனாலே ஆபத்து இல்லே...

பொ:— வேறே எவனாலேயும்கூட ஆபத்து வராது சாமி—