பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

குட்டிச்சுவராக்கரிங்கன்னு பேசறாங்க, பொன்னா நீயே சொல்லு, உன்னை யாராவது, பொன்னா, பக்கிரி எப்படிப் பட்டவன், அவன் எப்படி இருப்பான் அப்படின்னு கேட்டா, என்ன சொல்லுவே? ........என்ன சொல்லுவே பொன்னா?

பொ:— உள்ளதைச் சொல்ல வேண்டியதுதான்.

ப:— உள்ளதைச் சொல்லாமப்படிக்கு, ‘பக்கிரியா? அவள் பெரிய ஆசாமியப்பா, ஆள் ஆறடி உயரம் இருப்பான். தடிப்பய, வேளைக்கு ஒரு படி அரிசி சோறு வேணும், அப்படின்னு சொல்றது ஒரு சமயம். இன்னொரு சமயம் கேட்டா, பக்கிரியா! அவன் குள்ளப்பய, புல் தடுக்கினா கீழே விழுந்து போவான், அவ்வளவு சொத்தை அப்படின்னு சொல்றது, ஒரு இடத்திலே கேட்டா, பக்கிரி கருப்பு நிறம் என்கிறது; இன்னொரு இடத்திலே கேட்டா, நல்ல சிவப்பு நிறமுங்க பக்கிரி என்கிறது. இப்படிப்பேசினா என்னான்னு அப்பா அர்த்தம்...இப்படி நீ பேசினா என்னா சொல்வாங்க பொன்னன் என்னா இப்படி உளறிக் கொட்டறானே — பைத்தியம் பிடித்திருக்கோன்னு கூடச் சொல்லுவாங்களா, இல்லையா? நீயே, சொல்லு...

பொ:— ஆமா, வேளைக்கு ஒருமாதிரியா, ஆளுக்கு ஒரு தினுசா பேசினா, உளறலுன்னுதான் சொல்லுவாங்க...

ப:— விஷயம் புரியாமப்படிக்குப் பேசறதுன்னுதானே அர்த்தம்...

பொ:— ஆமா...ம்

ப:— அதுபோலத்தானே, கடவுள் எப்படி இருப்பாரு, என்ன செய்வாரு, அவருடைய குணாதிசயம் என்னான்னு கேட்டா, என்னென்ன சொல்றாங்க தெரியுமா?

இன்னிறத்தான் இவ்வண்ணத்தான்
என்றெழுதிக் காட்ட ஒண்ணாதானை