பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

ப:— நீ, காரணம் கேட்டா மட்டும் சொல்லுவானா! பொன்னா பார்த்தயா, இதுகளோட போக்கை...

பொ:— இப்ப எனக்கு சூட்சமம் தெரிஞ்சதாலே, தங்கவேலு பிழைச்சான் — இண்ண ராத்திரி, ஆளைப் பைசல் செய்துடறதுன்னு ஏற்பாடு—பக்கிரி! ஏன்னா, ஐயன்தான் சொன்னான், தங்கவேலு உன்னைப் போலீசிலே சிக்கவைத்து விடுவாண்டான்னு—நமக்குத்தான் முன் கோபமாச்சே. ஆள் உயிரோட இருந்தாத்தானே—பிணமானா, போலீசுக்கு எப்படிப் போக முடியும்னு, சபதம் செய்துவிட்டு வந்தேன்...நல்ல, வேளையா என் கண்ணைத் தொறந்த—இல்லையானா கொலைகாரனாகி இருப்பேன்—

ப:— பொன்னா! உன் கலியாண விஷயமா, அதே ஐயன் என்ன சொன்னான்...

பொ:— அதானே ஆச்சரியமா இருக்கு — காதலுக்கு ஜாதி பேதம் கிடையாதுன்னு, கதை கதையாச் சொன்னான்—காரணமெல்லாம் காட்டினான்—

ப:— ஆனா, தன்னோட ஜாதி மட்டும் காப்பாத்தப்பட வேணும்னு, பாடுபடறான் — அதுக்காக, கொலை செய்யக்கூடத் தயாராகிறான்—

பொ:— அநியாயமா இருக்குடா—பக்கிரி!

ப:— ஏன், தெரியுமோ— கலப்பு மணத்தாலே தப்பு இல்லேன்னு உனக்குச் சொன்னவன், தன் மகளோட கலியாணத்தைத் தடுக்கறது ஏன் தெரியுமோ...

பொ:— ஜாதித் திமிரு..

ப:— அதுமட்டும் இல்லே... தங்கவேலுக்குப் பதிலா, தர்பங்கா மகாராஜா, அல்லது ஒரு ஜெமீன்தாரன் சுகுணாவைக் கல்யாணம் செய்துகொள்கிறதுன்னு ஏற்பாடு இருந்தா, கலப்பு மணம் கூடாதுன்னு பேசமாட்டான் — அதுதான் ‘மேதை’ன்னு புகழுவான்—அதாவது பொன்னா! எந்தக் காரியம் செய்கிறதானாலும், ஜாதியைக் காப்பாத்தறதானாலும் சரி—ஜாதியை அழிக்கிறதானாலும் சரி—எந்தக்