99
பக்கிரி! இதைத் தங்கவேலு அப்பனிடம் கொடு—டாக்டருக்குத் தரக்கூட பணம் இராது...
ப:— ஐயனோட காசு....
பொ:— ஆமாமாம்... ஒரு நல்ல காரியத்துக்காவது செலவாகட்டும்... நீ தங்கவேலுவைக் கவனிச்சுகோ—நான் போய், ஐயனைப் பார்த்துவிட்டு வாரேன்...
ப:— ஆத்திரமாப் பேசினே, காரியம் கெட்டே போயிடும். கோபக்குறியே தெரியக்கூடாது—துளிகூட...
பொ:— பயமாத்தான் இருக்கு—அந்தப் பாவியைப் பார்த்ததும், எனக்கு மனம் பதறத்தான் பதறும்—படபடன்னு பேசத்தான் தோணும்...
ப:— அதுதான் கூடாது என்கிறேன். நான் சொன்னது போல், ‘ஆக்ட்’ செய்யணும்...
பொ:— பாக்கறேன்... நமக்குப் பழக்கமில்லாத காரியம்...
காட்சி—22
இடம்:— சம்பந்தம் வீடு.
இருப்போர்:— சம்பந்தம், படுக்கையில் தங்கவேல்.த:— அப்பா வேறே யாரையாவது எனக்குத் துணையா இருக்கச் சொல்லிவிட்டு, நீ போய், சுகுணாவுக்கு விஷயத்தைச் சொல்லிவிட்டு வாப்பா... எனக்கு உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லே...
ச:— எப்படிடா தங்கவேலு, உன்னை விட்டு விட்டுப் போக மனம் வரும்—மறுபடியும் படுபாவிப் பயலுக, ஏதாச்சும் செய்ய வந்தா, என்னடா செய்றது...