பக்கம்:காதல் மனம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

61

அப்பொழுதே மக்கள் நடமாட்டம் கின்றுவிட்டது. அக்தச் சமயத்தில், திடீரென்று நான்கு முரடர்கன் எங்கிருக்கோ வந்து என்னேச் சூழ்ந்து கொண்டார் கள். நான் அஞ்சிப் பதைத்தேன். ஐயோ என்று கூச்சலிட்டு அலறினேன். ஒரு இரும்புக்கரம் என் அழுத்தை நெறித்தது. " சப்தம் செய்தால் கொலை செய்யப்படுவாய்' ஆயுதம் காட்டி இவ்வாறு எச்சரிக் கப்பட்டேன். கனநேரத்தில் என் வாயில் ஒரு துணிப்பந்து திணிக்கப்பட்டது. திமிறினேன், பயனில்லை எனது கைகால்கள் கட்டப்பட்டன. என் தலை சுழன்றது. மூட்டைபோல் என்னைத் துக்கிக் கொண்டு கடந்தனர் காட்டிற்குள். அக்தோ கான் கிலேமை...?

கன்ருக இருட்டிவிட்டது. மனித சஞ்சாரமற்ற காட்டிலே, சிறு குடிசையொன்றில் ஒலேப்பாய் மீது நான் கிடத்தப்பட்டேன். மங்கலான சிறு விளக் கும், பாயும் தவிர, அந்தக் குடிசையில் வேறு ஒன்று மில்லை. என்னே என்ன செய்யப்போஇருர்களோ?” என்பதை எண்ணிப் பார்த்தபோது என் உயிரில் பாதி போயேவிட்டது. வி யர் க் விறுவிறுத்து, உடம்பு சில்லிட்டுப் போயிற்று.

சிறிது நோக்கழித்து, குடிசைக்கு வெளியே எஜமான் இரகுநாத ஐயங்காரின் குரல் கேட்டது. பல ர் இசுகிசு வென்று பேசிக்கொள்வதையும் உணர்த்தேன். எனக்கு விஷயம் ஒருவாறு விளக்கிப் போய்விட்டது. தேகம் கிடுகிடென்று கடுங்கிற்று:

நான் னதிர்பார்த்தபடியே என் கை கால்கள் கட்டவிழ்த்து விடுவிக்கப்பட்டன. வாயில் அடைச் திருக்க கணிப்பந்து எடுக்கப்பட்டது. அதே சமய தில் ஐயங்கார் உள்ளே நுழைந்தார், சினத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/64&oldid=1252740" இலிருந்து மீள்விக்கப்பட்டது