பக்கம்:காதல் மாயை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைகள். இப்புத்தகத்தில் அடங்கியுள்ள இளந்தென்றல் தாய் பாசம் வென்றது ஆசைக்கனல், முதலிய கதை. கள் இப்படி உருவானவை. அவைகளிலே ஏழை மக்க ளின், ஆசாபாசங்கள், அவற்றின் விளைவு, துயரம், களிப்பு எல்லாம் விரவிக் கிடக்கின்றன. புத்தகத்தின் பெயரைத் தாங்கியுள்ள காதல் மாயை உண்மையிலே, இக்கதைகள் அனைத்துக்கும் சிகரமாக அமைந்திருக்கிறது. உண்மைதான் ! காதலின் மாயையை அத்தான் நரசிம்மன் அறிந்திருந்த அளவுக்குக்க, ட, அதிலே மூ ழ் கி க் கி ட ங் த விமலா அறிந்துகொள ள வில்லையே ? - வாழும் காதல் நமது சிந்தையைப் பறித்துவிடும் மற்ருெரு சிறந்த சிறுகதை. கதை அம்சத்துக்கு அதிகப் பிரதானம் அளிக்காது நடையழகைக்கொண்டே வாசகர் கண் மயக்கிவிடும் ஆசிரியரின் கதைகளுக்கு மற்ருெரு சான்ருக இருப்பது வாழும் காதல்’. அதிலுள்ள காவிய நடையில் மனம் பதிந்துவிட்டால், கருத்தையும் கதையை யும் கினேக்க உங்களுக்குப் பொழுதே கிடைக்காது. சிறு கதை இலக்கணங்கள் நன்கு பொருந்தி, மேல் காட்டுச் சிறந்த ஆசிரியர்களின் கதைகட்கு ஈடு கிற்கிறது. இக் கதை. றுேபூத்த நெருப்பி ல் ஆசிரியர், சந்தேகங்களே ஆராயாமல், அதன்மீது முடிவுகட்டிவிடுவதால் ஏற்படும். விபரீதத்தை கன்ருக விளக்கியிருக்கிருச். மொத்தத்தில், நண்பர் ஆறுமுகத்தின் இந்தக் கதைகள் அனேத்தும் ஒவ்வொருவரும் விரும்பிப் படிக்கத்தக்கவை. 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/11&oldid=789038" இலிருந்து மீள்விக்கப்பட்டது