பக்கம்:காதல் மாயை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மாயை ஆல்ை அந்தக் கடிதம்......! விமலா, - கல்ல செய்தி கொண்டு வரலாமென்றுதான் கோட்டைகட்டி வந்தேன்; என் தந்தையின் முடிவை அறி யக் காத்திருந்து காலத்தைக் கரைத்து வந்தேன், உன் ஆசைமுகம் காண. கடைசியில் என் கனவு பலிக்கவில்லை. கம் மணத்திற்கு என் தந்தை ஒப்பமறுத்துவிட்டார். தயவு செய்து என்னேக் குற்றவாளியாக்காதே. திரும்பவும் உன்னே நேரில் கண்டு இவ்விஷயத்தைச் சொல்ல மனம் தாளா மலே கடிதத்தில் எழுதுகிறேன். அந்த நாளில்-அதா வது, நம் முதல் சந்திப்பில் என்னவெல்லாமோ கூறினேன். சுந்தரக் கனவில் திளேத்தேன் புதையல் எடுத்த பொருள் போல, லலா-மஜ்னு, ரோமியோ-ஜூலியட் ஆகிக் காதல் வாழ்வு தொடங்கக் கொண்டிருந்த ஆசை மடிந்துவிட் உது. என் பாக்கியம் அவ்வளவுதானே? - ரகுராமன். 景 歌 ※ - ரகுராமன் கல்லூரி கண்பன் விமலாவிற்கு. ஒரே வகுப்பு என்ற ஒட்டுறவு. அந்த ஆண்டு விழாவிற்குக் கவியரசர் பாரதிதாசனின் எதிர்பாராத முத்தம்’ நாடகத் துக்கு ஏற்பாடுகள் பிரமாதமாக கடந்தன. சந்தர்ப்பமோ அல்லது விட்டகுறை என்கிருர்களே, அந்தப் பந்தமோ இருவரையும் பிணத்தது காதலர்களாக-ஆமாம்; காட கத்தில் ஒருவரையொருவர் துழாவியறிய ஏகப்பட்ட இடைவேளைகள் கைகொடுத்து உதவின. நாடகம் முடிந்த பிறகு சகுராமனும் விமலர்வும் ஜோடிப்புருவாக எண்ணி னர். ஆல்ை....! - 業 亲 秦 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/16&oldid=789048" இலிருந்து மீள்விக்கப்பட்டது