பக்கம்:காதல் மாயை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு தாயும் கனயனும் இவ்விதம் பாச மொழிகளைப் பரி மாறிக் கொண்டனர். தன் அருமை மகனே எப்படியும் மீண்டும் கண்டு விடவேண்டுமெனற ஆதுரத்தில் அவள் பகவானேயும் பக்கபலமாக்கிக்கொள்ளப் பிரார்த்தித்துக் கொண்ட காணிக்கைகள் எத்தெையா. அவள் கனவு பலித்துவிட்டது. ஒரே புதல்வனேக் கண்குளிரக் கண்டு விட்டாள். குமார் அன்னேயின் அண்மையில் அமர்ந்து வேண்டி யன செய்தான். ஆல்ை, அவன் உள்ளம் மட்டும் ஜூபே கா வைச் சுற்றியிருந்ததை அவன் தாய் எவ்விதம் அறிவாள்? உற்சாகமற்ற ரீதியில் காலதேவனின் கைப்பிடியினின் அறும் நாட்கள் பல நழுவி ஒடி மாதம் மூன்று கடந்ததைக் கோடிட்டுக்காட்டியது காலண்டர். . 'குமார், இத்தனே வருஷங்களாக என் மனத்தில் உழன்ற ஆசை.உன்னுல்தான்பூர்த்தியாகவேனும், அதுவே அன்று மரணப்படுக்கையில் உன் தந்தை என்னிடம் வாங்கிக்கொண்ட பிரதிக்ஞையும் கூட. எ ன க் கு ம் இன்ருே நாளேயோ என்றிருக்கிறது. அதற்குள் உனக் குக் கல்யாணம் செய்து கண்ணுரப் பார்க்கவேண்டும், அப் போதுதான் என் ஆவி சாந்தியுடன் பிரியும்" கல்யாணம்- . - மறுபடியும் முணுமுணுத்தது.அவன் வாய். திகைத்து கின்ற அவன் சிந்தனே சுழன்றது. . . 'எனக்கு மணம்செய்து பார்க்கவேண்டும். இதுதானே என் அன்னேயின் ஆசை. ஜூபேகாவை இங்கு அழைத்து வந்து வாழ்க்கைத் துணைவியாகக் கைப்பிடித்தால்.....!. 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/42&oldid=789106" இலிருந்து மீள்விக்கப்பட்டது