பக்கம்:காதல் மாயை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ப் 'அம்மா, அதிசயமோ ஆத்திரமோ கொள்ளாதீர்கள். சொல்லப்போளுல் நீங்கள் பெரிதும் கடமைபட்டிருக்கின் lர்கள் வள்ளிக்கு. அவள் மாத்திரம் அன்று மனம் ஒப் பாதிருந்திருந்தால் உங்கள் வாழ்வு எப்படித் திரும்பியிருக் குமோயார்கண்டது? உங்கள் குழந்தைக்குப் பூரண உரிமை ஆண்டவள் வள்ளி. அவள் வயிற்றுக் குழந்தை ஜயந்தி! நான்காம் முறையும் நீங்கள் பிரசவித்த குழந்தை இறந்து விட்டது. அச்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்டால்பாவம் உங்கள் கிலே என்னுகுமோ என்ற பச்சாத்தாபத்தி ல்ை அதேநாள், வள்ளிக்குப் பிறந்த சிசுவை, கினேவு இழந்துகிடக்க உங்கள் அண்மையில் கிடத்தினேன். உங் கள் பாக்கியம் பெரிய டாக்டர் சம்மதித்தார். அதன்மூலம் வள்ளிக்கும் வழி பிறந்தது. தசன் பெற்ற மகளேப் பராம ரிப்ப தெப்படி என்று திகைத்த அவள் கவலையையும் போக்கமுடிந்தது. இப்படி கிகழ்ந்த சம்பவத்துக்கு சக் தர்ப்பங்களும் பெரிதும் உதவின. வாஸ்தவம் தான்; விதி இப்படிவ ள்ளியைக் கூட்டுவித்தது. உங்கள் வாழ்க்கையும் திரும்பியது” என்று முடித்தாள் களின. இந்த வரலாற்றைக் கேட்டதும் காந்திமதிக்கு வியப்பு ஏற்படவில்லை. வியப்பு ஏற்படாததைக் கண்டு டாக்டர் நளினதான் வியக்தாள். காந்திமதியின் கண்களினின்றும் நீர் சிந்த, சிலேயாக கின்று கொண்டிருந்த வள்ளியை ஒரு முறை ஏறிட்டு விழித்து வள்ளி, நீ மனிததெய்வம். உன் தாய்மையை என் பொருட்டுத் தியாகம் செய்தாய். ஆமாம்: உன் குழந்தை ஜயந்தி. தன்னலமற்ற உன் தியாகத்திற்கு இன்னும் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன். ஜயந் திக்கு இனி தாய் கிடைத்துவிட்டாள். இனி நான் கிம்மதி யுடன் சாகிறேன்; நான் கொடுத்துவைத்தவள். வள்ளி, ஒரு 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/79&oldid=789187" இலிருந்து மீள்விக்கப்பட்டது