பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மான மணத்தைப்புரிந்தான். மனிதஞகி

செய்திருக்கமாட்டான்     கதைப்பாடலின் 
  பிற்சேர்க்கையின் நோக்கமே இதுதான்.

அவனுடைய விவாதத்தைக் கேட்டதும் அரசன் மனம் மாறி ஆரியமாலையோடும் மற்றும் மனைவியரோடும் வாழ்ந்திருக்கக் கூறி ஞளும். இதன் நோக்கம் அரசு சாதிமுறையைப் பாதுகாப்பதில் கடைப்பிடித்த கடுமையான அடக்குமுறையை மறைப்பதற்காகும். பின் ஏன் காத்தவன் கழுவேற்றப்பட்டதாகக் கதை கூறுகிறது? கழுவேற்றப்பட்ட செய்தி மறைக்கமுடியாத உண்மை கொல்லப் பட்டவர்கள், கழுவேற்றப்பட்டவர்கள் சிறு தெய்வங்களாக மிகப்பழங்கால முதலாக வணங்கப்பட்டு வந்தார்கள். காத்தவ ராயனும் அவ்வாறே வணங்கப்பட்டிருக்கவேண்டும். எ ன வே கழுவேற்றப்பட்டசெய்தியை மறைக்க முடியாமல், உயர்சாதியினர் காத்தவராயன் கடவுள் சாபத்தை நிறைவேற்றுவதற்காகத்தானே கழுவேற முன்வந்தான் என்ற செய்தியைப் புனைந்தனர்.

உண்மைச் செய்திகளின் ஆற்றலைக் குறைக்க இத்தகைய முயற்சி களை உயர்சாதியினர் பலமுறை செய்திருக்கிரு.ர்கள். நந்தன் கதை யில் அவனே சோதியில் கலந்துவிட்டான் என்று கூறப்படுகிறது. ஆளுல் அவன் பிராம்மணரால் கோயில் முன் எரிக்கப்பட்டான் என்று உறுதியாக நிரூபிக்கலாம். இதுபோலவே காத்தவ ராயனைக் கழுவேற்றிவிட்டு அவனே வேண்டிக்கொண்டதாகக் கதையை மாற்றிவிட்டிருக்கவேண்டும்.

பறையனை காத்தவராயனே பிராம்மண குலத்தில் பிறந்து மூன்று நாள் பறைச்சி முலைப்பால் குடித்ததாக இக்கதை கூறுகிறது. இதல்ை தேவனை காத்தவராயன் இவ்வுலகப் பிறப்பிலும் மனு தர்மம் மாருமல் ஆரியமாலை என்ற பிராம்மணப் பெண்ணை மணந் தான் என்றுகூறி சாதியைப் பாதுகாத்துக் கொள்ள கதை முயலு: கிறது. வேறு சாதிப்பெண்களை மணந்து கொள்ளுவது மனுதர் மப்படி குற்றமல்ல. பிராம்மணன் தனது வர்ணத்திற்குக் கீழே யுள்ள வர்ணங்களில் பெண் கொள்ளலாம். அதன்படி காத்தவ ராயன் தவறு செய்தவனல்லன். பறையன் என்று சொல்லிக் கொண்டு பிராம்மணப் பெண்ண அழைத்துச் சென்றதுதான் மனுதர்மப் படி குற்றம்.

ஆளுல் காத்தவராயனே மனுதர்மத்தை தனக்கு முன் மீறிய மும்மூர்த்திகள், முனிவர்கள் கதைகளைக் கூறித் தான் செய்தது. தவறல்லவென்று வாதிக்கிருன்.